கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிக்கும் இனிகோ பிரபாகர்..
நடிகர் இனிகோ பிரபாகர் அழகர் சாமியின் குதிரை, மற்றும் ரம்மி, பிச்சுவா கத்தி, வீரய்யன் படங்களில் ஹீரோவாக நடித் தார். எந்த பாத்திரம்மாக இருந்தாலும் அதன் தன்மை மாறாமல் நடிப்பது ஏனிடம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்றார்.
இதுபற்றி இனிகோ பிரபாகர் அளித்த பேட்டி:
சிறிய வேடங்களில் நடித்தபோதும் சரி ஹீரோவாக நடிக்கும் போதும் சரி என் கதாபாத் திரத்தின் தன்மை மாறாமல் நடிப்பதில் ஆர்வம், காட்டுவதால் அத ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அதனால் தான் என்னை ரசிகர்கள் மறக்காமல் இருக்கிறார்கள்.
ஆர்.கே நகர் படத்தில் வில்லனாக நடித் தேன் என்றாலும் அது அப்படத்தின் ஹீரோவுக்கு சமமான வேடம் ஆகும். இப்படத்தை இயக்கிய சரவணராஜன் என்னிடம் யார்த்தத்தை விரும்பினார், நானும் அதையே செய்தேன். இயக்குனர் வெங்கட்பிரபு ஆர்.கே நகர் படத்தில் என நடிப்பை பலரும் பாராட்டி யதாக கூறியது என்னை மேலும் உத்வேகப்படுத்தியது. தற்போது இரண்டு புதிய படங்களில் ஹீரோவாக நடிக்கிறேன். அதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளிவரும்.
இவ்வாறு இனிகோ பிரபாகர் கூறினார்.