தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னை ரைஃபில் கிளப். இதில் பல முன்னணி பிரபலங்கள், தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த கிளப்பிற்கு செயலாளராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன். இவர் சூர்யாவின் 2டி நிறுவனத்தில் சீ.இ.ஓ மற்றும் இணை தயாரிப்பாளர். இவருக்குத் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் மிக அதிகம். தேசிய அளவிலான போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று அனைவருடைய பாராட்டையும் பெற்றவர்.
தற்போது இவர் சென்னை ரைஃபில் கிளப்புக்கு செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பதற்காக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவருக்கு முன்பாக இந்தப் பதவியில் தினத்தந்தி உரிமையாளர் டாக்டர் பி.சிவந்தி ஆதித்தன் இருந்தது குறிப்பிடத்தக்கது.