சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் நடந்து வந்த அண்ணாத்த பட ஷுட்டிங்கில் பங்கேற்று நடித்து வந்தார். நடிகை நயன்தாராவும் ஷுட்டிங்கில் கலந்து கொண்டார்.
ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த முக்கிய காட்சிகளை இயக்குனர் சிவா படமாக்கினார்.இந்நிலையில் ரஜினி காந்த் படக் காட்சிகளை முடித்து கொடுத்துவிட்டு இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்திலி ருந்து காரில் வீடு திரும்பிய ரஜினிக்கு அவரது மனைவி லதா வாசலில் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.
previous post