Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வாட்டாள் நாகரஜுக்கு ’முன்னா’ பட ஆடியோ விழாவில் எச்சரிக்கை..

சங்கை குமரேசன் இயக்கி நடிக்கும் படம் முன்னா. நியா ஹீரோயினாக நடிக்கிறார். டி.ஏ.வசந்த் இசை அமைக் கிறார். ரவி ஒளிப்பதிவு செய்கிறார். ராமு முத்துச் செல்வன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதில் டைரக்டர்கள் ஆர்.வி.உதய குமார், வி.சேகர், பெப்சி சிவா, கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் விக்னேஷ், விஜயமுரளி கலந்து கொண் டனர்.

வி ழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது.’முன்னா படத்தின் கதையை ஒரு பாடலில் சொல்லி இருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் துணிச்சலாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் கூடுதல் காட்சிகள் சேர்க்க வேண்டும் என்றால் அதையும் சேர்த்து வெற்றி படமாக வழங்க வேண்டும். தமிழக அரசு கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்தி ருக்கிறது’ என்றார்.
வி.சேகர் பேசும்போது,’சினிமாவுக்கு வருவர்கள் ஒரு லட்சியத் தோடு வரவேண் டும். ஆசைக்கு வந்து படம் எடுத்து விட்டு செல்லக்கூடாது. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த, கமல்ஹாசன் போன்றவர்கள் லடசியத்துடன் வந்து நடித்தார்கள் அவர்கள் இன்றளவும் பேசப்படு கிறார்கள் அவர்களிடம் உழைப்பு நேர்மை இருந்தது. சினிமாவில் எல்லோருக்கும் இது தேவை அத்துடன் அதிர்ஷட்மும் கொஞ்சம் தேவை’ என்றார்.

ஸ்டண்ட் இயக் குனரும் கில்டு சங்க தலைவரு மான ஜாகுவார் தங்கம் பேசிய தாவது:

இந்த விழாவுக்கு தாமதமாக வந்ததற்கு காரணம் கொடைக்கானலில் தயாரிப் பாளர் மற்றும் படக் குழுவை ரவுடி குரூப் ஒரு அறையில் பூட்டி வைத்து மிரட்டுவதாக தகவல் வந்தது. அதுகுறித்து கொடைக்கானலில் போலீ ஸுக்கு போன் மூலம் தகவல் சொல்ல முயன்றேன் யாரும் போன் எடுக்கவில்லை. பிறகு அவசர உதவி போலீஸுக்கு போன் செய்தேன். அது இந்தியில் பேசியது எனக்கு இந்தி தெரியாது. பிறகு கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லைன் கிடைத்தது. அவரிடம் புகார் அளித்த ரவுடிகளிடமிருந்த அந்த தயாரிப்பாளரையும் மற்றவர்களையும் மீட்டோம்.

அவசர போலீஸுக்கு போன் செய்தால து இந்தியில் பேசுகிறது. ஆந்திராவில், கேராளவில், கர்நாடகாவில் இந்தியில் பேசினால் சும்மா இருப்பார்களா? ஒரு வழி செய்திருப்பார்கள். தமிழக மீனவர்களை கப்பல் கொண்டு இடித்து இலங்கை படையினர் சாகடித்திருக்கிறார்கள். நாங்கள் வந்தால் சரியாகி விடும் என்று ஆட்சிக்கு வருப வர்கள் அதை தடுப்பதில்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் இது தான் நடந்தது. பா ஜா ஆட்சி யிலும் இதுதான் நடக்கிறது, தமிழர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும் இல்லா விட்டால் கன்னட வாட்டாள் நாகராஜ் தமிழக எல்லைக்குள் வந்து தமிழனை அடிக்கும் கொடுமை நடக்கத்தான் செய்யும். தமிழக எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்திய கன்னட வாட்டாள் நாகராஜ் மீது என்ன நடவடிக்கை எடுக் கப்பட்டது. எந்த அரசும் எடுக்கவில்லை.
இவ்வாறு ஜாகுவார் தங்கம் பேசினார்.

ஜாகுவார் தங்கம் பேச்சுக்கு  பாஜா வை சேர்ந்த திரைப்பட  இயக்குனர் பெப்சி சிவா பதில் அளித்தார். அவர் கூறும்போது,’நாங்கள் கட்சி பார்க்கவில்லை. இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட போது அன்றைக்கு பாரதிராஜா தலைமையில் நடந்த போராட் டத்தில் கலந்து கொண்ட 7 இயக்குனர்களில் நானும் ஒருவன். வாட்டாள் நாகரா ஜை எதிர்த்து போராட்டம் நடத்த நான் தயார், நீங்கள் நேரம் குறித்து சொல்லுங்கள் நான் வருகிறேன்’ என்றார்.


இதையடுத்து ஜாகுவார் தங்கம், பெப்ஸி சிவா இருவ ரும் அருகருகே நின்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட் டது. முடிவில் முன்னா படத்தின் டீஸர் மற்றும் ஆடியோ வெளி யி டப்பட்டது.

Related posts

#Mega156 Titled Vishwambhara

Jai Chandran

சத்யராஜ் தாயார் காலமானார்

Jai Chandran

காமெடி படமாக உருவாகிறது ஸ்வீட்டி நாட்டி கிரேஸி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend