Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இளையராஜா வெளியிட்ட மதுரைமணிக்குறவன் பாடல்..

காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி. காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி.கே இயக்கியுள்ளார். ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.

படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல் களையும் கவிஞர் முத்துலிங்கம் எழுதியுள்ளார்.

மனசில பெரிய வந்தான் மதுரக்காரன்… என்ற பாடலை இளையராஜாவே பாடியுள்ள பாடலும்

கல்யாணம் செஞ்சு வச்ச மீனாட்சிக்கு வைரக்கல் மூக்குத்தி செஞ்சு போடு.. என்ற பாடலும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கும்.

அனைத்து பாடல்களும் ஒரே நாளில் கம்போசிங் செய்யப்பட்டது. மதுரை மணிக்குறவன் படத்தின் பின்னணி இசை முதல் படமாக இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது.

மதுரையில் நடந்த உண்மை சம்பவமும் பல கொலைக் குற்றங்களில் நிகழும் பின்னணி பற்றியும் உருவாக்கப்பட்ட கதை. தூத்துக்குடி, மதுரை சம்பவம் போன்ற படங்களின் மூலம் பிரபல மான ஹரிக்குமார் நாயகனாக இரட்டை வேடங்களில் நடிக்க மாதவிலதா கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜி.காளையப்பன், சுமன், ராதாரவி பருத்தி வீரன் சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், கௌசல்யா, பருத்தி வீரன் சுஜாதா, கஞ்சா கருப்பு, அஸ்மிதா, ராஜ்கபூர், டெல்லி கணேஷ் போன்றோர் நடித்துள்ளனர்.

இப்படதின் ஒளிப்பவை டி.சங்கர் செய்கிறார். வி.டி.விஜயன் எடிட்டிங் கவனிக்கிறார். வெற்றி விஜய் வசனம் எழுதுகிறார் பி.ஆர் ஓ வெங்கட்
கதை திரைக்கதை இயக்கம் – ராஜரிஷி.கே.

இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

Related posts

கமலின் மக்கள் நீதி மய்யம் அமைத்த கூட்டணி… வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு..

Jai Chandran

துருக்கி சர்வதேச திரைப்பட விழாவில் “பொருநை”

Jai Chandran

Tamil Nadu distribution of Yash’s “Toxic” Locks Massive Deal..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend