Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பொருளாதார நெருக்கடி, இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்தது: பிரதமர் ராஜினாமா?

கடன் சுமையால் சில நிறுவனங்கள் திவாலாகி உள்ளன.   ஆனால் ஒரு நாடே திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப் பதை பலரும் முதன்முறையாக கேள்விப்படுகின்றனர். இப்படியொரு நிலைக்குள்ளாகி இருக்கும் நாடு இலங்கை.
அந்நாடு தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.  உணவுப் பொருட்கள் உள்பட அத்தியா வசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலைவாசி விண்னை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ அரிசி 1000 ரூபாய்க்கு விற்கப்படு கிறது.  தினமும் 13 மணி நேர மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் தவிப்புக்குளாகிீயிருக் கின்றனர். பலர் பசி பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அந்நட்டு அரசு மீது கடும் ஆத்திரத்தில் ஆழ்ந்துள்ளனர். எதிர்க் கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். போராட்டம் தீவிரமடைந்து அரசு, ராணுவ வாகனங்கள் எரிக்கப்பட்டன. போரட்டக்காரர்கள் மீது  கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீஸார் கலைத்தனர்.   போராட்டத்தை கட்டுப்படுத்த  அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப் பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாளது ஆனால் அந்த தகவலை அந்நாட்டு பிரதமர் .அலுவலகம் மறுத்துள்ளது.

Related posts

ரெஜினா பட இசை உரிமை கைப்பற்றிய டைம்ஸ் மியூசிக்

Jai Chandran

மஹா (பட விமர்சனம்)

Jai Chandran

ரூட் நம்பர் 17( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend