Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இந்தியாவின் முதல் ஆஸ்ட்ரோ-திரில்லர் ராதே ஷியாம் விரைவில்

எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படமான ராதே ஷ்யாம், யூவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிப்பில் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், படத்தின் முன்னோட்ட வீடியோ (கர்ட்டைன் ரைஸர்) எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

கைரேகை நிபுணராக வித்தியாசமான பாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருப்பது, சூத்திரதாரியாக அகில இந்திய பிரபல நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருப்பது, அதிநவீன விஷுவல் எஃபெக்ட்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ள அழகிய காட்சிகள். பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேக்கு இடையேயான பற்ற வைக்கும் கெமிஸ்ட்ரி என பல்வேறு காரணங்களுக்காக இந்த காதல் கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பல மொழிகளில் படமாக்கப்பட்டுள்ள ராதே ஷியாம், 1970-களில் ஐரோப்பாவின் பின்னணியில் அமைந்துள்ளது. ராதே ஷ்யாமின் சிறப்பு முன்னோட்ட வீடியோவில் காணப்படுவது போல் மிகவும் புதுமையான மற்றும் வித்தியாசமான கதைக்கருவோடு படம் உருவாகியுள்ளது. படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் டீசர்கள் சாதனை அளவில் பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில், முன்னோட்டமும் இணையத்தை புயல் போல் தாக்கியுள்ளது.

விதிக்கும் காதலுக்கும் இடையே நடைக்கும் மர்ம போராட்டத்தை டீஸர் வெளிப்படுத்தியிருந்த நிலையில், பேச்சுப்பொருளாக மாறியுள்ள முன்னோட்டம் படத்தின் ஆழத்தை இன்னும் வெளிப்படுத்தியுள்ளது.

மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அதன் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மார்ச் 11, 2022 அன்று திரைக்கு வரவுள்ள பன்மொழிப் படமான ராதே ஷ்யாமை, ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். யூவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.

Related posts

மதுரை உண்மை சம்பவ அடிப்படையில் “தி ரோட்”

Jai Chandran

‘Vaathi’ collected 75 crores 8 days

Jai Chandran

குருப்  (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend