கொரோனா காலகட்டத்துக்கு பிறகு உலக அளவில் பல நாடுகளில் பொருளாதார சரிவு ஏற்பட்டது. தற்போது இலங்கை பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டு அத்யாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள எதிர்க் கட்சிகள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்வதாக அறிவித்தன.
அதன்படி இன்று மார்ச் 3ம் தேதி காலை பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியபோது இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்ய முயன்றபோது குறிப்பிட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டத்துக்கு புறம்பாக இருப்பதாக கூறி அதனை துணை சபாநாயகர் நிராகரித்தார்.இதற்கிடையில் , பாகிஸ் தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு
அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “துணை சபாநாயகரின் முடிவை ஒவ்வொரு பாகிஸ்தானியரும் வரவேற்றுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான வெளிநாட்டு சதியாகும். நம்பிக்கை யில்லா தீர்மானத்தை நிராகரிக்கும் முடிவு சரியானதே. பாகிஸ்தான் நாடாளுமன் றத்தை கலைத்துவிட்டு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும்” என. குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் இம்ரான் கானின் இந்த கோரிக்கையை பாகிஸ்தான் அதிபர் ஏற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டதுடன் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும்” என்றும் அறிவித்தார்.
பாகிஸ்தானில் பிரதமராக பொறுபேற்ற யாரும் இதுவரை 5 வருடம் முழுமையாக ஆட்சி நிறைவு செய்தது கிடையாது.. இம்ரான் கான் ஆட்சியும் அந்த பட்டியலில் இணைந்தது.