லாக்டவுன்ல சூப்பர் ஸ்டாருக்கே ஃபைன் போடுட்டாங்கப்பா..
அப்படியா? எப்ப?
இத படிங்க தெரியும்.
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான பண்ணை வீடு இருக்கிறது. இரு நாட்களுக்கு முன் ஆடம்பர லம்போர்கினி காரை முக கவசம் அணிந்து ஓட்டிக்கொண்டு பண்ணை வீட்டுக்கு சென்றார். படம் நெட்டில் வைரலானது. அத்துடன் அவர்சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதும் வைரலானது. இபாஸ் எடுக்காமல் அடுத்த மாவட்டத்துக்குள் நுழைந்தார் என்ற தகவலும் கூடவே வைரலானது.
மாநகராட்சிக்கும், போக்குவரத்து போலீ ஸுக்கும் புகார் பறந்தது. சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதற்காக சத்தமில் லாமல் அவருக்கு 100 ரூபாய் ஃபைன் போட்டு அமைதியாகிவிட்டார்கள். அதற் காக இருக்கும் சில உளவாளிகள் அபராத விஷயத்தை ரசீதுடன் நெட்டில் லீக் செய்த னர் அதுவும் வைரலாகி விட்டது.
இ பாஸ் வாங்காதது பற்றி ரஜினியே டிவிட்டரில் மெசேஞ் வெளியிட்டார். ‘நான் E – Pass இல்லாம பண்ணை வீட்டுக்கு போனதை எல்லாரும் உங்க வீட்டு பிள்ளையா நினச்சு மன்னிச்சிருங்க’ என அவர் தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்த பின் தொடங்க உள்ளது.