Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினி அரசியலுக்கு முழுக்கு: கே.டி. குஞசுமோன்

ரஜினி அரசியலுக்கு முழுக்கு போட்டதற்கு ஜென்டில்மேன் பட தயாரிப்பாளர் கே.டி. குஞசுமோ நன்றியும், வரவேற்பும் தெரிவித்தி ருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, என்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அறிவிப்பு… அவரது ரசிகர்களில் ஒருவரான எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. உலக மெங்கும் வாழும் அவரது அனைத்து ரசிகர்களையும் மகிழச் செய்திருக்கும் என்பது நிச்சயம்.
சூப்பர் ஸ்டாரின் முடிவு, தெளிவான சிந்தனை, வருடத்திற்கு அவரது இரண்டு படங்களாவது தொடர்ந்து வெளிவந்தால் தான் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையா ளர்களும், பல்லாயிரக் கணக்கான சினிமா தொழிலாளர்களும், ரசிகர் களும் மகிழ்வார்கள். சினிமா செழிக்கும், வியாபாரம் சிறக்கும்.
அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் சினிமா தொழில் சிதைந்து கிடக் கிறது. இந்த தருணத்தில் அவரது சரியான முடிவு திரையுலகினரின் மனங் களில் தேனை வார்க்கி றது.
ஒரு விநியோகஸ்தராக, ‘தங்கமகன்’, ’மூன்று முகம்’, படிக்காதவன்’, ’ஊர்க் காவலன்’, ’எஜமான்’, போன்ற அவரது நடிப்பில் வெளியான பல படங்க ளை நான் வெளியிட்டுள் ளேன். என்னைப் போலவே எத்தனையோ தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையா ளர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களால் லாபம் சம்பாதித்துள்ளனர். அவருடனான எனது பழக்கம் 40 வருடங் களுக்கும் மேலானது. சினிமாவில் அவர் ஒரு பணம் காய்க்கும் மரம். தயாரிப்பாளர்களின் தங்கப் புதையல், அனை வராலும் போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.
பூரண ஆரோக்கியத் தோடும் நல்ல உடல் நலத்தோடும், அவர் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன். சினிமாவின் சிகரமாய் உயர்ந்து நிற்கும் அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள்.!
*வெல்டன் அண்ணாத்த.!*

இவ்வாறு கே.டி. குஞ்சு மோன் தெரிவித்திருக் கிறார்.

Related posts

குலேபகாவலி இயக்குனர் கல்யாண் அடுத்த படம் விரைவில்

Jai Chandran

மழை வெள்ளம்: மக்களை இன்று சந்திக்கும் கமல்

Jai Chandran

விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend