Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தேனாண்டாள் முரளி  வெற்றி

சென்னையில் உள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பா ளர்கள் சங்கம், இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 1050 தயாரிப்பாளகள் வாக்கு பதிவு செய்தனர்.  ஐகோர்ட் உத்தரவு படி தேர்தல் அதிகாரி நீதியரசர் ஜெயச்சந்திரன் தேர்தலை நடத்தி வைத்தார்.

சென்னை அடையாறு பகுதி யில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலைக்கல்லூரியில் தேர்தல் நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை  1303. பெற்றிருந் தனர். மொத்தமுள்ள 27 பொறுப்புகளுக்கு112 வேட் பாளர்கள் போட்டியிட்டனர்.
தலைவர் பதவிக்கு என்.ராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி, டி.ராஜேந்தர், பி.எல்.தேனப் பன் ஆகி மூவரும் முதல் முறையாக தலைவர் பதவிக்கு  மொத்தம் 3 அணி களாக போட்டியிட்டனர். துணை தலைவர் பதவிக்கு  சிவசக்தி பாண்டி யன், ஆர்.கே.சுரேஷ், பிடி. செல்வகுமார், முருகன், சிங்காரவடிவேலன், கதிரேசன் ஆகியோர் போட்டியிட்டனர்.
கௌரவ செயலாளர் பதவிக்கு  ராதாகிருஷ்ணன், மன்னன், கே.ஜே.ஆர், சுபாஷ் சந்திர போஸ், பொருளார் பதவிக்கு  கே.ராஜன், சந்திரபிர காஷ் ஜெயின், ஜே.எஸ்.கே சதிஷ்குமார் போட்டியிட் டனர்  மூன்று அணியினரும் தேர்தலில் தீவிரமாக இருந்து பணியாற்றினார்கள். சுயேச் சைகளும் தங்கள் பிரசாரத்தை முடுக்கிவிட்டிருந்தனர்.
வெற்றி பெற்றால் என்னென்ன நன்மைகள் சங்க உறுபினர் களுக்கு செய்வோம் என்பதை ஏற்கனவே தேர்தல் அறிக்கை யாக அனை வரும்  வெளியிட் டனர். நடிகர் கமல்ஹாசன். நாஞ்சில் அன்பழகன் உள்ளிட்ட 1050 பேர்கள் வாக்களித்தனர்.
நேற்று மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. பிறகு ஓட்டு பெட்டி கள் பூட்டி சீல் வைக்கப்பட் டன.


இன்று (23.11.2020) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் என்.ராம சாமி என்கிற தேனாண்டாள் முரளி  557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போடியிட்ட டி.ராஜேந்தர்  388 வாக்குகள் பெற்றார். பி.எல்.தேனப்பன் 87 வாக்குகள் பெற்றார். செல்லாதவை 18.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் விவரம் வருமாறு:
தலைவர் – முரளி
துணைத் தலைவர் – ஆர்.கே.சுரேஷ் (முரளி அணி)
துணைத் தலைவர் – கதிரேசன் (சுயேச்சை)
கௌரவ செயலாளர் – ராதாகிருஷ்ணன் (முரளி அணி)
கௌரவ செயலாளர் – மன்னன் (டி.ஆர். அணி)
பொருளாளர் – சந்திர பிரகாஷ் ஜெயின் (முரளி அணி)
செயற்குழு உறுப்பினர்கள் ஒட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.  வெற்றி பெற்ற முரளி மற்ற நிர்வாகிகளுக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்ற னர்.   சங்க தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையை யொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related posts

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு: அரசிடம் கமல் வலியுறுத்தல்

Jai Chandran

Hiphop Tamizha Adhi is on cloud nine for his double bonanza

Jai Chandran

பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை சித்ரா தற்கொலை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend