Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்து 1950ம் ஆண்டு இதே நாளில் பிறந்த ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை  இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்..

ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்தில்.’‘அன்புள்ள ரஜினிகாந்த் ஜி, மகிழ்ச்சிகரமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்’’ என பிரதமர் மோடி. கூறி உள்ளார்.

 

வழக்கமாக இல்லாமல் இம்முறை ரஜினி பிறந்த நாள் அவரது அரசியல் பிரவேச அறிவிப்புடன் வந்திருக்கிறது. அதனால் அவரது  ரசிகர்கள் தமிழகம் முழுவதும் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். கோவில்களில் சிறப்பு அர்ச்சனை ரஜினி பெயரில் நடத்தி வருகின்றனர்.

இம்மாதம் 31ம் தேதி புதிய கட்சிக்கான தேதி அறிவிக்கப் போவதாகவும், ஜனவரியில் கட்சியை தொடங்கப் போவதாகவும் ஏற்கனவே ரஜினி தெரிவித்திருக்கிறார். பிறந்தநாளையொட்டி போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு வாசலில் அதிகாலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். ரஜினிகாகா ஸ்பெஷல் படம் வெளியிட்டு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரசாந்த், தியாகராஜன் ரூ 10 லட்சம் நிதி..

Jai Chandran

Vetrimaran’s International Institute of Film and Culture

Jai Chandran

பெரிய படங்களால் நூடுல்ஸ் படத்துக்கு வந்த இன்னல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend