Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஹரி இயக்கத்தில் வெடிக் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்கும் புதிய படம்

டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் அதிக பொருட்செலவில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். பெயர் சூட்டப் படாமல் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் நடிக்கும் 33 வது படம். இவருக்கு வருக்கு ஜோடியாக முதன் முறையாக இணைகிறார்,ப்ரியா பவானி சங்கர். மேலும் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி,போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ டிவி பிரபலம் புகழ், ராமசந்திர ராஜு, ஐஸ்வர்யா, ஜெயபாலன், ரமா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.


இதன் படபிடிப்பு இன்று (மார்ச்) 3ம் தேதி சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது. அதை தொடர்ந்து வரும் 16ம் தேதி முதல் பழநியில் படபிடிப்பு தொடரும். மேலும் ராமேஸ்வரம், ராம்நாடு , தூத்துக்குடி, காரைக்குடி மற்றும் சென்னை பகுதிகளை நடைபெறும்.

16வது படமாக சூப்பர் ஹிட் டைரக்டர் ஹரி இப்படத்தை இயக்குகிறார்.
இசை: GV.பிரகாஷ் ( ‘சேவல்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஹரியுடன்.. )ஒளிப்பதிவு: KA.சக்திவேல். எடிட்டிங்: அந்தோணி ( முதன்முறையாக ஹரி கூட்டணியில் )

கலை: M.சக்தி வெங்கட் ராஜா. ஸ்டண்ட்: அனல் அரசு. தயாரிப்பு மேற்பார்வை: சின்ன ராஜேந்தர். பி ஆர் ஓ: ஜான்சன். CEO: G.அருண்குமார். .நிறுவனம்: டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ்
தயாரிப்பு: வெடிக்காரன் பட்டி s.சக்திவேல்

Related posts

கெவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பூம் பூம் காளை’..!

Jai Chandran

“அற்றைத்திங்கள் அந்நிலவில்” இசை விழாவில் ஐ லியோனி ருசிகர பேச்சு

Jai Chandran

ரஜினி டிஸ்சார்ஜ்: ஒரு வாரம் ஓய்வு. ரிஸ்க்கான பணிகள் தவிர்க்க வேண்டும்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend