படம்: செல்பி
நடிப்பு: ஜி.வி.பிரகாஷ்குமார், கவுதம் மேனன், வர்ஷா பொல்லம்மா, குணாநிதி, சங்கிலி முருகன், வாகை சந்திரசேகர், தங்கதுரை, சாம்பால், நாயகம், ஸ்ரீஜா, ஜெய் ஷங்கர்
தயாரிப்பு: டி.சபரிஷ்
இசை:ஜி.வி.பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: விஷ்ணு ரங்கசாமி
இயக்கம்: மதிமாறன்
ரிலீஸ்: கலைப்புலி எஸ்.தாணு
பி ஆர் ஒ: ஆர்.குமரேசன்
தனியார் கல்லூரிகளில் மேனேஜ் மெடன்ட் கோட்டாவில் டாக்டர் சீட்டுக்காக நடக்கும் கொள்ளைபற்றி அப்பட்டமாக பேசும் கதை.
பிள்ளைகளை டாக்டருக்கு படிக்க வைக்கும் கனவுடன் வரும் பெற்றோர் களிடம் லட்சக்கணக்கில் பேரம் பேசி கல்லூரியில் சீட் வாங்கி கொடுக்கும் கமிஷன் நிறுவனம் நடத்துகிறார் கவுதம்மேனன். அவருக்கு போட்டியாக கல்லூரி மாணவர் ஜி.வி.பிரகாஷ்குமார் குறைந்த கமிஷனில் சீட் வாங்கி தரும் வேலையில் ஈடுபடுகிறார். இதில் சில ஏமாற்றங்கள் ஏற்பட பணத்தை திருப்பி தர முடியாமல் பிரகாஷ் குரூப் தடுமாறு கிறது. இதில் அவரது நண்பர் தூக்கு போட்டு சாகிறார். இதற்கெல்லாம் கவுதம் மேனன்தான் காரணம் என்று அவரிடம் மோதுகிறார் ஜி.வி. ஒருகட்டத்தில் அவருடனே கமிஷனுக்கு பணியாற்ற சம்மதிக்கிறார். இதற்கிடையில் கல்லூரி நிர்வாகத்தினரிடம் கவுதம் மேனன் மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அடுத்து நடப்பது என்ன? ஜிவி.பிரகாஷ் கதி என்னவாகிறது என்பதற்கு கிளைமக்ஸ் சரியான பாடம் சொல்லித் தருகிறது.
இப்படத்தில் கதைதான் ஹீரோ என்பதால் மற்ற அனைவருமே தங்கள் நடிப்பை 100 சதவீதம் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் நிறைவு. செய்திருக்கின்றனர்.
டாக்டர் படிப்புக்கு சீட் வாங்கி தருவதாக ஒருவரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கும் பிரகாஷ் திடீரென்று அந்த நபர் சீட் வேண்டாம் பணத்தை திருப்பிகொடு என்று கேட்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுவதும் இந்தநெருக்கடி யில் பிரகாஷின் நண்பர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதும் அரங்கை அமைதியாக்குகிறது.
தன்னால்தான் தன் நண்பன் தற்கொலை செய்துகொண்டதாக மனம் வருந்தும் ஜி.வி.பிரகாஷ் தனது நண்பனின் குடும்பத்தை கடனிலிருந்து மீட்க மீண்டும் சீட் போடும் வேலையில் ஈடுபடுவதும் அதனால் எதிர்கொள்ளும் ரவுடிகளின் தாக்குதலுக்குள்ளாகி உயிர் பயத்தில்
பதுங்குவதும் படபடப்பு.
கல்லூரியில் கமிஷனுக்கு சீட் பிடித்துத் தரும் ரவிவர்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கவுதம் மேனன் சைலன்ட் வில்லனாக அசத்துகிறார். தன்னை தாக்க வரும் ரவுடிகளிடம் சண்டை காட்சியிலும் நடித்து ஆச்சர்யப்படுத்து கிறார்.
வர்ஷா பொல்லம்மாவுக்கு அதிக வேலையில்லை.
கல்லூரி அதிபராக நடித்திருக்கும் சங்கிலி முருகன் உட்கார்ந்த இடத்திலி ருந்தே காய் நகர்த்துகிறார்.
ஜி.வி.பிரகாசின் நண்பர் நஸீராக நடித்திருக்கும் குணாநிதி மனதில் இடம்பிடிக்கிறார்.
கலைப்புலி எஸ்.தாணு வழங்க டி.ஜி பிலிம் கம்பெனி சார்பில் டி.சபரீஷ் தயாரித்திருக்கிறார்.
கல்வியில் மலிந்திருக்கும் ஊழல், அதனால் சீரழியும் மாணவர்களின் வாழ்க்கையை அப்பட்டமாக வெளிப் படுத்தியிருக்கிறார் இயக்குனர் மதிமாறன்.
விஷ்ணு ரங்கசாமி கேமிரா காட்சிகளில் ஊடுருவி பாய்ந்திருகிறது.
ஜி.வி.பிரகாசஷின் பின்னணி இசை படத்துக்கு வலிமை.
செல்பி- கல்வி கமிஷன் ஏஜென்ட்டுகளை தோலுரிக்கிறது.