2021 ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதற்காக தமிழக அரசியல் கட்சியில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளன. இந்த தேர்தலில் ரஜினிகாந்த தனிகட்சி தொடங்கி போடியிட உள்ளார். கட்சி தொடங்கும் தேதியாஇ இம்மாதம் 31ம்தேதி அறிவிக்கிறார். ஜனவரியில் கட்சி தொடங்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை மதுரையில் இன்று தொடங்கினார்.
“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் என்ற முழக்கத்துடன் அவர் பயணத்தை தொடங்கினார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். அவருக்கு மநீம கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று 4 இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார்.
நாளை காலை மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் திறந்த வேனில் கமல்ஹாசன் பிரசாரம் செய்துவிட்டு திண்டுக்கல், தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல இடங்களுக்கு திறந்த வேனில் செல்கிறார்.செல்லும் வழியில் தெருமுனைக் கூட்டங்களில் மக்கள் நடுவில் தோன்றி பேச உள்ளார்.
இம்முறை நடக்கும் சட்டமன்ற தேர்தல் வித்தியாசமான கூட்டணிகள் களம் காணும், என்று எதிர்பார்க்கப்படுகிறது.
15-ம் தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும், 16-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும் கமல் பிரசாரம் மேற்கொள்கிறார்.