Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா கருத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட சவால்: பூச்சி முருகன் கருத்து

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா கருத்து சுதந்திரத்துக்கு விடுக்கப் பட்ட சவால் என தென்னிந் திய நடிகர் சங்க அறக்கட்டளைக்குழு உறுப்பினர், முன்னாள் தணிக்கைக் குழு உறுப் பினர் பூச்சி முருகன் கூறியுள்ளர். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

நம் நாட்டில் திரைப்படம் என்பது எல்லா தரப்பையும் சென்று சேரும் வலிமை யான ஊடகம். ஒளிப்பதிவு சட்ட திருத்தம் என்ற பெயரில் ஒன்றிய அரசு அதன் குரல்வளையை நெரிப்பது ஏற்றுக் கொள்ளவே முடியாது. தணிக்கை செய்யப்பட்ட படங்களை யார் விரும்பி னாலும் தடை செய்யலாம் என்பது கருத்து சுதந்திரத் துக்கான மிகப் பெரும் அச்சுறுத்தல். சமூகவலை தளங்களை தொடர்ந்து தற்போது திரைத் துறையை தன் பாசிச கரங்களால் நெரிக்கிறது ஒன்றிய அரசு. அடுத்து இது ஊடகங்களை நோக்கியும் பாயலாம். திரைத்துறையை தன் கைப்பாவையாக மாற்ற ஒன்றிய அரசு நினைக் கிறது.இது ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்துக்கே விடுக்கப்பட்ட சவால்.சமூகத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதே திரைப்படம். இந்த சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தால் படைப்பாளி ஒரு கதையை யோசிக்கும் போதே ஒன்றிய அரசுக்கு ஆதரவாக மட்டுமே யோசிக்க முடியும். இதன் மூலம் மக்களை சிந்தனை அடிமைகளாக மாற்ற முயற்சிக்கிறது ஒன்றிய அரசு. ஒரு கலைஞன் என்ற முறையிலும் முன்னாள் தணிக்கைக் குழு உறுப்பினர் என்ற முறையிலும் என் கடுமையான கண்டனங் களை பதிவு செய்கிறேன்.

இவ்வாறு பூச்சி எஸ்.முருகன் கூறியுள்ளர். ச

Related posts

’பூமி படத்தில் ஜெயம் ரவி போலவே என் பாத்திரமும் கவனத்தை ஈர்க்கும்’ நிதி அகர்வால்

Jai Chandran

Director Shankar Honoured with Doctorate by Vels University

Jai Chandran

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் !!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend