Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

போலாமா ஊர்கோலம் (பட விமர்சனம்)

படம் : போலாமா ஊர்கோலம்

நடிப்பு: மதுசூதன் ரெட்டி, பிரபுஜித், சக்தி. மகேந்திரா, துளசி, ரவிஏழுமலை, பரந்தாமன்,  கிருஷ்ணா, ஷிவ்கார்த்திக், சூர்யா, ஆதிராஜன், ரபிஃக்

தயாரிப்பு: கஜசிம்ஹா வழங்கும் படம்

பின்னணி இசை: கே.எம்.ராயன்

பாடல் இசை: ஷமந்த் நாக்

ஒளிப்பதிவு : விஷாலி சுப்ரமணியன், டேவிட் பாஸ்கர்

இயக்கம்: நாகராஜ் பாய் துரைலிங்கம்

பி.ஆர்.ஒ: நெல்லை சுந்தர்ராஜன்

கால்பந்தாட்ட வீரர் மது இளம் வயதில் ஒரு பெண்ணை கண்டவுடன் காதலிக்கி றார். ஆனால் அது நிறைவேறாத காதலாகிறது. வயதான காலத்தில்  தனது காதலை அப்பெண் வெளிப்படுத்து வதுடன்  கால்பந்தட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்கிறாள். ஆனால் சில நாட்களில் இறந்துவிடுகிறார். இறந்த. காதலியின் சமாதியில் வெற்றிகோப்பை கொண்டு வந்து வைப்பதாக கூறும்  மது. நெல்லூரில் நடக்கும் போட்டியில் பங்கேற்க பஸ்ஸில் செல்கிறார். வழியில் இறங்கி கடைக்கு செல்லும்போது பஸ் அவரை விட்டுவிட்டு புறப்படுகிறது. வழியில் வாலிபரிடம்  பைக்கில் லிப்ஃட் கேட்டு செல்கிறார். லிஃப்ட் தந்த வாலிபருக்கு காதல் தோல்வி ஏற்படுவதை கண்டு வருந்தும் மது அந்த இளைஞனுக்கு புதுகாதலி கிடைப்பார் அவர் உன்னையே சுற்றி வருவார் என்று கூறுகிறார். அப்படியொரு காதலி அந்த வாலிபருக்கு கிடைத்தாரா? அந்த காதல் நிறைவேறுகிறதா ? என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

படத்தின் தொடக்கம் பெருசுகளின் காதல் போல் கதை தொடங்கினாலும் சிறிது நேரத்திலேயே இளம் ஜோடிகளின் காதல் ஆரம்பித்து ஹைவேஸில் பறக்கும் வாகனனம்போல் காட்சிகள் பறக்கின்றன. மது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதுசூதன ரெட்டி இயல்பான தோற்றம், எதார்த்தமான  பேச்சு, அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாகன்,  நாயகியாக பிரபுஜித், சக்தி நடித்திருக்கின்றனர். இந்த காதல் ஜோடி இணைவதில் .வரும் தடங்கல், ஆபத்து, தாக்குதல் எல்லாமே கொஞ்சமும் எதிர்பாராதவை. ஹைவேஸில் தொடங்கி கால்பந்தாட்ட கிரவுண்டில் இந்த காதல் முடிவதற்குள் உறவுகளின் துரத்தல், வில்லன்களின் அராஜகம் என  அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

பிரபுஜித்தின் அப்பாவித்தனமான நடிப்பில் காமெடியும் இழையோடுகிறது.  இரண்டாவது காதலும்  நிறைவேறாதோ என்ற வருத்தத்துடன் முகத்தில் தேக்கியபடி கால்பந்தட்டத்தில் விளையாடுவதுமாக கேரக்டரோடு ஒன்றியிருக்ககிறார்.

ஹீரோயின் சக்தியும் அதிக மேக்கப் இல்லாமல் இயல்பான தோற்றத்தில் கவர்கிறார். பிரபுஜித் மீது காதல் வந்ததும் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்து காதல் அம்பு விடுவது கிக்.

மதுவுடன் விளையாடும் கால்பந்தட்டக் காரர்கள் எல்லோருமே ஒரிஜினல் சேம்பியன் மற்றும் பிளேயர்கள் என்பது குறிப்பிடத்தககது.

விக்னேஷ்சிவன் உள்ளிட்ட சில இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய  நாகராஜ் பாய் துரைலிங்கம் தனது முதல்படத்தையே மாறுபட்ட காதல் கதையாக உண்மை சமபவத்தை மையமாக வைத்து வழங்கி மனதில் இடம் பிடிக்கிறார்.

பாடல் இசை ஷமந்த் நாக், பின்னணி இசை கே எம். ராயன் பணி நிறைவு. அதேபோல் விஷாலி சுப்ரமணியன், டேவிட் பாஸ்கர்   ஒளிப்பதிவும்  ஏமாற்றவில்லை.

போலாமா ஊர்கோலம் – சுவாரஸ்யம் குறையாத காதல் பயணம்.

 

 

 

 

 

 

 

Related posts

சிரஞ்சீவிக்கு வில்லன் நடிகர் நன்றி வீடியோ

Jai Chandran

Vijay – Lokeshkanagaraj Join Handstogeather again for Vijay67

Jai Chandran

மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ” 99/66 “..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend