கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படமான எம் எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவர் இன்று காலை மும்பை பாந்தரா பகுதியில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. 34 வயதே ஆன இளம் நடிகரான இவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
சில தினங்களுக்கு முன் தனது தாய்க்கு உருக்கமான கடிதம் ஒன்றை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் எழுதி இருந்தார். இதனால் அவர் மனக்கவலையில் இருந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சுஷாந்தின் முன்னாள் மேனேஜர் திஷா சலைன் என்பவர் தனது குடியிருப்பில் 14 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை குறித்து சுஷாந்த் சிங் அதிர்ச்சி வெளியிட்டிருந்தார். மேலும் சுஷாந்த் ரெயிஹா சக்ரபோர்த்தி என்ற இளம் பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார். அவர்கள் ஜோடியாக இருக்கும் படங்கள் நெட்டில் வலம் வருகின்றன.
சுஷாந்த் மரணம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.’ இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் விரைவாக சென்றுவிட்டார். டிவி, சினிமாவில் அவர் நன்கு வரவேற்பு பெற்றிருந்தார்.
சினிமாவில் சுஷாந்தின் வளர்ச்சி பலருக்கு முன்னுதாரணமாக இருந்தது. தனது நடிப்பால் பல மறக்க முடியாத காட்சிகளை அவர் வழங்கி உள்ளார். அவரது மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத் தாருக்கும் ரசிகர்களுக்கும் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி ’ என குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
’உண்மையிலேயே சுஷாந்த் மரணம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. பேச வார்த்தைகள் வரவில்லை. அவர் நடித்த சிச்சோர் படத்தை பார்த்து பாராட்டினேன். அவர் போன்ற திறமையான நடிகருடன் நான் இணைந்து நடிக்க விரும்பினேன். சுஷாந்த் இழப்பை தாங்கிக்கொள்ள அவரது குடும்பத் தினருக்கு இறைவன் வலிமை தர வேண்டும்’ என தெரிவித்திருக்கிறார் நடிகர் அக்ஷய் குமார். அதேபோல் அஜய்தேவ்கன், அபிசேக்பச்சன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.
next post