சென்னையில் 12 நாட்கள் முழு ஊரடங்கு..
புது விதிகள் முதல்வர் அறிவிப்பு..
சென்னை ஜூன் 14:
தமிழக அரசு தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு பற்றி இதில் ஆலோசிக்கப் பட்டது. கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதியில் ஊரடங்கு கடுமையாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதைய டுத்து புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் அறிவித்தார்.
அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என 4 மாவட்டங்களிலும் வரும் 19-ந் தேதி அதிகாலை 12 மணி முதல் 30-ந் தேதி இரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது
பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தும். தமிழக அரசின் அறிவிப்பு விவரம் வருமாறு :
சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் ஜூன் 19-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன் னேரி, மீஞ்சூர் பேரூராட்சி களிலும் பூவிருந்தவல்லி, ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத் தப்படும்.
செங்கல்பட்டு மறைமலை நகர் நகராட்சிகளிலும் நந்தி வரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும் காட்டாங் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத் தப்படும். 4 மாவட்டங்களி லும் முழு ஊரடங்கு அமல்ப டுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதார்ர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும்.
அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்க ளுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும். அடுத்த 12 நாட்களில் இரண்டு ஞாயிற்றுகிழமையிலும் தளர்வுகள் கிடையாது.
மருத்துவம் சார்ந்த பணி களுக்கு எந்த தடையும் இல்லை. சரக்கு போக்கு வரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல தளர்வு உண்டு.
மத்திய மாநில அரசு துறை சார்ந்த பணிகளை 33 சதவீத பணியாளர்களுடன் மேற் கொள்ள அனுமதி. கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை.
வாடகை ஆட்டோ, டாக்ஸி இயங்க அனுமதி இல்லை. அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் அனுமதிக்கப்படும்.
ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேசன் கடைகள் செயல் படாது. அந்த பகுதிகளில் ரேசன் ஊழியர்கள் நேரில் சென்று நிவாரணத்தை வழங்குவார்கள்.
காய் கறி கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து 2 கி.மீ தூரம் வரை மட்டுமே சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதி.
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப் படுகிறது.
தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். தொண்டு நிறுவனங்கள் அரசிடம் அனுமதி பெற்று இயங்கலாம்.
நீதிமன்றம், நீதித்துறை சார்ந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும். ஊடகத்துறை சார்ந்த பணிகள் தொடர்ந்து நடைபெற அனுமதி வழங் கப்படுகிறது.
வங்கிகள் 29, 30 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டும் 33 சதவீத பணியாளர்க ளோடு செயல்படும். ஏ.டி,எம் எந்திரங்கள் செயல்படும்.
கட்டுமான தொழிலாளர்கள் பணி நடைபெறும் இடத்தில் தங்கி இருந்து பணி செய்வ தற்கு மட்டும் அனுமதி வழங் கப்படுகிறது. திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும்
இவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.