நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களை அந்த காலம் தொட்டே நற்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார். கடந்த 40 வருடமாக நற்பணி இயக்கம் நடத்திவரும் கமல்ஹாசன் இயங்கி வரும் ரசிகர் ந்ற்பணி மன்றம் ரத்த தானம் செய்வதை என்பதை அடிநாதமாக கொண்டு பணியாற்றியது. மக்களிடமும் அதுபற்றி விழிப்புணர்விஏற்படுத்தி ரத்த தான முகாம்கள் நடத்தியிருக்கின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பிறகும் நற்பணிகளை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஜூன் 14ம் உலக ரத்த தான தின நாள். இதையொட்டி கமல்ஹாசன் முக்கிய தகவல் வெளியிட்டிருக்கிறார்.
‘கடந்த 40 ஆண்டுகளில் நம் நற்பணி அணியினர் 4 லட்சம் யூனிட் ரத்த தானம் செய்துள்ளனர். 4 லட்சம் உயிர்களை
காக்கும் முயற்சி அது. உங்கள் உதவி உயிர் காப்பதை கண்முன் காண்பீர்கள். உலக ரத்த தான தினமான இன்று ரத்த தானத்தின் தேவையை எடுத்துரைப்போம். நம் தானம் தொடர்வோம் உயிர் காப்போம்’ என கூறி உள்ளார் கமல்.
previous post