Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர்  கிச்சா சுதீப் ஜோடியான , பாலிவுட் நாயகி ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்

நடிகர்  கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும், “விக்ராந்த் ரோணா” திரைப்படம் பற்றிய ஒவ்வொரு செய்தியும், மிகப்பெரும் ஆச்சர்யங்களையும், பெரும் எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இந்த  நிலையில், தற்போது ரசிகர்களின்  கனவு நாயகி, பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்  “விக்ராந்த் ரோணா” படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மிக சமீபத்தில், நடிகர் பாட்ஷா கிச்சா சுதீப் அவர்கள் திரைத்துறையில் நுழைந்து  25 ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில்   “விக்ராந்த் ரோணா” படத்தின் டைட்டில் லோகோ மற்றும் 180 நொடிகள் கொண்ட   ஸ்நீக் பீக் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயின் புர்ஜ் காலிஃபாவில் பிரமாண்டமாக வெளியிடபட்டது. இந்நிகழ்வு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பாலிவுட் முன்னணி நாயகி இப்படத்தில் பங்கு கொள்வது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் கூறியதாவது…
எங்களின்  “விக்ராந்த் ரோணா” திரைப்படத்தில், பாலிவுட்டில் முன்னணி நாயகியாக திகழும்   ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் இணைந்ததில், நான் மிகவும்  மகிழ்ச்சியடைகிறேன். அவர், தான் பங்கு பெறும் படங்களில், ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வசியம் கொண்டவர்.  இப்படத்திலும் அவரது பங்கு, மிக முக்கியமானதாகவும், ரசிகர்களை கவரக்கூடியதாகவும்  இருக்கும் என்றார்.

இயக்குநர் அனூப் பண்டாரி கூறியதாவது…
ஒரு புதிய நாயகனை உலகிற்கு அறிமுகப்படுத்தும் பிரமாண்ட படைப்பான “விக்ராந்த் ரோணா” திரைப்படத்தில், பாலிவுட்டின் முன்னணி நாயகி   ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் இணைந்திருப்பது படத்திற்கு புதிய பரிமாணத்தை  தந்துள்ளது. ரசிகர்களுக்காக காட்சி வடிவில் ஒரு மிகப்பெரிய மாயாஜாலத்தை இத்திரைப்படத்தில் உருவாக்கி வருகிறோம். எங்களுடன் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்   இணைந்திருப்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி என்றார்.

நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்  கூறியதாவது…
உலகிற்கு  தனித்துவமான, ஒரு இந்தியக் கதையைச் சொல்ல விரும்பும், ஒரு கனவுப்படைப்பு தான் “விக்ராந்த் ரோணா”.  இதுபோன்ற ஒரு மகத்தான படைப்பின் உருவாக்கத்தில் நானும் இணைந்ததில்  மிகவும்  மகிழ்ச்சியடைகிறேன்.  திரையரங்குகளில் மீண்டும் கோலாகல கொண்டாட்டத்தை, உருவாக்கும் படமாக இப்படம் இருக்கும்.

நடிகர் கிச்சா சுதீப் கூறியதாவது…
ஒரு படத்தை துவங்க்குமோது இருக்கும் அதே உற்சாகம், முடிவிலும் இருப்பது அரிதானது. ஆனால் “விக்ராந்த் ரோணா” படத்தில் பணியாற்றும் அனைவரிடமும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதை காண பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பிற்கும் அவர்களது இடையறாத உழைப்பிற்கும், பெரும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் அவர்களின் நடிப்பிற்கும், நடனத்திற்கும் மிகப்பெரிய ரசிகன் நான். அவரது நடனம் என்னையும் நடனமாட வைத்துள்ளது. அவரது வரவு படக்குழுவில் மேலும் உற்சாகத்தை கூட்டியுள்ளது. அவரின்  நேர்மறை உணர்வை இன்னும் அதிகமாக  பரப்பட்டும் என்றார்.

படத்தின் மிக முக்கியமான ஒரு நடன காட்சித்தொகுப்பு,  6 கோடி பொருட்செலவில், மிகப்பிரமாண்ட அரங்க அமைப்பில், 300 நடன கலைஞர்கள் பங்களிப்பில் படமாக்கப்பட்டுள்ளது. ஜானி மாஸ்டர் அமைத்திருக்கும் இந்த நடன காட்சி, இந்த வருடத்தின் மிகப்பெரும் டான்ஸ் நம்பராக புகழ் பெறும் எனும் நம்பிக்கை உள்ளது. மேலும் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் தமிழ் பதிப்பில் தனது சொந்த குரலில் பேசும் முயற்சியில் உள்ளார்.

பிரமாண்ட தயாரிப்பில், பன்மொழிகளில், ஆக்சன் அட்வென்சர் படமாக உருவாகும்  “விக்ராந்த் ரோணா”  திரைப்படம்,  3-D பதிப்பில்,  14 மொழிகளில், 55 நாடுகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அனூப் பண்டாரி இயக்கியுள்ளார். ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பினை செய்துள்ளார். B. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே ஜி எஃப் படப்புகழ் சிவக்குமார் படத்தின் செட்களை அமைத்துள்ளார்.  கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீதா அசோக்  மற்றும் ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related posts

அந்த 7 நாட்கள் (பட விமர்சனம் (

Jai Chandran

Raiza wilson Starring Fantacy Thriller Nova..

Jai Chandran

ரோமியோ: ஹீரோயினுடன் கிசு கிசு கிளப்பும் விஜய் ஆண்டனி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend