Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பெப்ஸி வளாகத்தில் புதிதாக மருத்தகம் திறப்பு.. சம்மேளனம் தலைவர் செல்வமணி அறிக்கை..

சென்னை நூறடி சலையில் உள்ள தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தின்‌ வளாகத்தில்‌ புதியதாக மருந்தகம் திறக்கப்ப்டடது.
இதுபற்றி பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சம்மேளனத்‌ தலைவர்‌ ஆர்‌.கே.செல்வ மணி தலைமையில்‌, மத்திய நல ஆணையர்‌ , பழ.இராதேந்திரன்‌‌ கலந்து கொண்டு திரைப்பட தொழிலாளர்கள்‌ மருந்தகத்தை திறந்து வைத்து சிறப்புறை ஆற்றினார்‌. இந்த மருந்தகத்தின்‌ மூலம்‌
சுமார்‌ 25ஆயிரம்‌ திரைப்படத்‌ தொழிலா ளர்கள்‌ மற்றும்‌ அவர்களது குடும்பத் தினர்கள்‌ பயன்பெறுவார்கள்‌ என்று‌
ஆர்‌.கே.செல்வமணி‌ தெரிவித்தார்‌.
மேலும்‌, இந்த மருந்தகம்‌ அமைவதற்கு ஒப்புதல்‌ வழங்கிய தொழிலாளர்‌ மற்றும்‌. வேலை வாய்ப்பு அமைச்சகத்தின்‌ மத்திய மந்திரி சந்தோஷ்‌ குமார்‌ கங்குவார்‌க்கும்‌, செயலாளர்‌ ஹிரா லால்‌ சன்வாரியா வுக்கும்‌ மற்றும்‌ இணை செயலாளர்‌ அஜய்‌ திவாரிக்கும்,‌ மத்திய நல ஆணையர்‌ பழ.இராஜேந்திரனு‌க்கும் சம்மேள னத்தின்‌ சார்பில்‌ மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. .
மேலும்‌ இந்த நிகழ்ச்சியில்‌ தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேள னத்தின்‌. பொதுச்செயலாளர்‌ அங்கமுத்து சண்முகம்‌, பொருளாளர் சுவாமிநாதன்‌, துணைத்தலைவர்கள்‌ தினா, திருஜே ஸ்ரீதர்‌.
ஷோபி பவுல்ராஜ்‌, செந்தில்குமார்‌, ராதாகிருஷ்ணன்‌, மனோஜ்குமார்‌, பரோம லிங்கம்‌ மற்றும்‌ இணைச்செயலா ளர்கள்‌ சபரிகிரிசன்‌ .ராஜா, ரமணபாபு, சம்பத்குமார்‌, ஸ்ரீபிரியா, அசோக்‌ மேத்தா, சிக்கந்தர்‌ ஆகியோர்‌ கலந்துகொண்டனர். திரைப்படத்‌ தொழிலாளர்‌ நலநிதி மருந்த கத்தின்‌ முதன்மை மருந்துவ அதிகாரி மருத்துவர்‌ .ஸ்ரீலதா ஆகியோர்களுக்கு எங்கள்‌ சம்மேளனத்தின்‌ சார்பில்‌ நன்றி தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித் திருக்கிறார்.

Related posts

கலைப்புலி எஸ்.தாணு வெளியிடும் மோகன்லால், பிரியதர்ஷன் பிரமாண்ட படம்

Jai Chandran

சினிமா டைட்டில்-விளம்பர அனுமதிக்கு ஒப்புதல்: டி.சிவா அறிக்கை..

Jai Chandran

தேவரின்113வது குருபூஜை டி.ராஜேந்தர் மலர்கள் தூவி மரியாதை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend