கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு விஜய் டி வி யில் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 நடக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போதுகமல்ஹாசன் அதற்கான புரோமோ வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:“நலமா.. நாம் யதார்த்தமாக ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது. உலகெங்கிலும் பரவி இருக்கும், மருந்தே கண்டுபிடிக்கப்படாத, ஒரு நோய், இந்த உலகம் ஒரு சின்ன கிராமம் என்பதை நமக்கு உணர்த்தி இருக்கிறது. எங்காவது அமேசானில் தீப்பிடித்தால் எங்கு நமக்கு ஆக்சிஜன் குறைகிறது.
நீங்களும் நானும் வேலைக்கு போகலைனா.. நம்மை நம்பி இருக்குற ஆட்டோ ரிக்ஷா டிரைவர், பஸ் ஓட்டுநர், அடிக்கடி சாப்பிட போகும் ஹோட்டல், டீ கடை, மீன் கடைகார ஆயா, அவங்களுக்காக மீன் பிடிக்க போகிற மீனவர்கள்.. இப்படி சங்கிலி தொடராக.. நம்மை நம்பி இருப்பவர்கள் ஐந்து மாதமாக வேலை இல்லாமல் இருக்கிறார்கள். நோய் ஆபத்தானது தான். ஜாக்கிரதையாக இருக்கனும்.. ஆனால் அதுக்காக வீட்டிலேயே வேலை இல்லாமல் இருக்க முடியாது. WHO அதாவது உலக சுகாதார அமைப்பு நமக்கு அறிவுறுத்தி இருப்பது படி பாதுகாப்பாக இருப்போம்.
இதோ நான் வந்துட்டேன். அதே மாதிரி நீங்களும் உங்கள் வேலையை தொடங் குங்கள், நம்மை நம்பி இருப்பவர்களை வாழ வையுங்கள். நாமே முன்னெடுப் போம் ஒரு புதிய தொடக்கத்தை, புதிய யதார்த்தத்தை, புதிய வாழ்க்கையை நாமே தீர்வு! சரி இப்போ வேலையை ஆரம்பிக்க லாமா
இவ்வாறு கமல் பேசி உள்ளார்.
நாமே தீர்வு pic.twitter.com/sUQDiEOpmo
— Kamal Haasan (@ikamalhaasan) August 27, 2020