அனைத்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சார்பில். சங்கத்தின் தலைவி திருமதி சுஜாதா விஜயகுமார், மற்றும் பொதுச் செயலாளர் குஷ்பு சுந்தர். வழிகாட்டுதல் படி தலைமைச் செயலகத்தில் தமிழக செய்தி துறை அமைச்சர் திரு சுவாமிநாதன் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் பொருளாளர் பாலேஷ்வர் துணைச் செயலாளர்
டிவி ஷங்கர் மற்றும் ஈ.ராம்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சங்கம் சார்பில் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்துவது குறித்து அரசு கூறும் நெறிமுறைகள் பின்பற்ற நடப்போம் என்று உறுதி கூறி அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டோம்.அமைச்சர் நம்பிக்கை தரும் விதமாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பங்கேற்றது…