Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பேட்டைக்காளி ( வெப் சீரிஸ் விமர்சனம்)

படம்: பேட்டைக்காளி

நடிப்பு: கிஷோர், கலையரசன், பாலா ஹாசன், ஆண்டனி, வேல ராமமூர்த்தி, ஷீலா ராஜ்குமார், சதீஷ்வரன், ஒன்றியம் பிரபு, கவுதம், லவ்லின் சந்திரசேகர், தென்றல் ரகுநாதன், பட்டாபி

தயாரிப்பு: வெற்றிமாறன்

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு : ஆர்.வேல்ராஜ்

இயக்கம்: லா.ராஜ்குமார்

ரிலீஸ் : ஆஹா ஒ டி டி தளம்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, ரேகா (D’one)

சிவகங்கை பகுதியில் வசிக்கும் பண்ணையார்  வேல ராமூர்த்தி ஊர்மக்களை தன் கட்டுக்குள் வைத்திருக் கிறார். தான் வளர்க்கும் காளையை ஜல்லிக் கட்டு போட்டியில் யாராலும் அடக்க முடியாது என்ற கர்வத்தில் தனது பெருமையை தக்க வைக்கிறார்.   ஒரு போட்டியில் அந்த காளையை கலையரசன் அடக்க அதைக்கண்டு வேல ராமமூர்த்தி அதிர்ச்சியும் கோபமும் அடைகிறார். கலையரனை ஆட்கள் வைத்து தாக்குகிறார். ஆனாலும் கலை யரசன் அந்த அடியாட்களை அடித்து துவம்சம் செய்கிறார். இது வேல ராமமூர்த்திக்கு மேலும் கோபத்தை அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் கலையரசன் கொல்லப் படுகிறார். இது இரண்டு ஊர் பகையாகிறது. கலையை கொன்றது வேல ராமமூர்த்திதான் என்று எண்ணி கலையரனுக்கு ஆதரவு தந்துவந்த கிஷோர் வேல ராமமூர்த்தியை கொல்ல முயல் கிறார். காரில் வரும் அவரை குண்டு வீசி தாக்குவதில் அவரது பார்வை பறிபோகிறது. புதுபண்ணையாராக வேல ராமூர்த்தியின் மகன் பாலா ஹாசன் பொறுப்பேற்கிறார்.  இதற்கிடையில் பண்ணையார் குடும்ப விசுவாசி மாயாண்டியும் கொல்லப்படுகிறார். அவனது தங்கை ஷீலா முரட்டு காளை ஒன்றை காளி என பெயரிட்டு வளர்க்கிறார். ஜல்லிக் கட்டில் அந்த காளை வீரர்களை தூக்கி வீசுகிறது.  இரண்டு ஊர் பகை தீர்ந்த்ததா ? கலையரசனை கொன்றது யார் ?  எனபதுபோன்ற  பல கேள்விகளுக்கு  பேட்டைக் காளி வெப் சீரிஸ்  கிராமத்து மண்மணத்துடன்  பதில்  அளிக்கிறது.

இயக்குனர் வெற்றின மாறன் தயாரிப்பில்  அவரது  உதவியாளர் லா.ராஜ்குமார் பேட்டைக்காளி வெப் சீரிஸை இயக்கியுள்ளார். இதுவரை எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு இதில் ஜல்லிக்கட்டு காட்சிகளை படமாக்கியிருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. 3 வருட கடும்  உழைப்பில்  இது உருவாக் கப்பட்டிருக்ககிறது என்பது  காட்சிகளின் நேர்த்தி புரிய வைக்கிறது.

காளைகள் வாடி வாசலிலிருந்து பாய்ந்து வருவதும் வீரர்களை கொம்பால் குத்தி  தூக்கி வீசுவதெல்லாம் மிரட்டல். நிஜ மாடு பிடி வீரர்கள் படத்தில் நடித்திருப்ப தால் நிஜ ஜல்லிக்கட்டை கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள்.

கலையரசன் காளையை அடக்கும் நிஜ வீரராகவே வாழ்ந்திருக்கிறார். வேல ராமமூர்த்தியின் காளையை திமில் பிடித்து அடக்கும்போது விசிலடிக்க தோணுகிறது.

பண்ணையார் திமிர் காட்டி நடிக்க இவர்தான் பொருத்தமானவர் என்பதை சீனுக்கு சீன் நிருபிக் கிறார் வேல ராமமூர்த்தி.

கலையரசனுக்கு  அடைக்கலம் தரும் கிஷோரின் நியாமான நடிப்பில் நயம் உண்டு. கலையரனை கொன்றதற்காக வேல ராமமூர்த்தி கார் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தி வெப் சீரிஸை பரபரப்புடன் தொடங்கி வைக்கிறார் கிஷோர்.

எப்போ  வருவார் என்று எதிர் பார்க்க  வைத்து வரவேண்டிய நேரத்தில் கரெக்டாக வந்து தொடருக்கு புதுப்பொலி வூட்டுகி றார் ஷீலா ராஜ்குமார். ஜல்லிக் கட்டு காளையை   அவர் பாசம் காட்டி வளர்ப்பது, போட்டியில் காளி ஜெயித்ததும்  துள்ளி குதிப்பது மாக பரவசப்படுத்துகிறார்.

சின்ன பண்ணையாராக வரும் பாலா ஹாசன் செய்யும் வில்லத் தனங்கள்  அப்பனுக்கு தப்பாமல் பிறந்திருக்கும் மகன்  என  பேச வைக்கிறது. சில முகங்கள் மட்டுமே நட்சத்திர முகங்கள் பல முகங்கள்   கிராமத்து நிஜ முகங்கள் என்பதால் காட்சிகளில்  உண்மைத்தன்மை  ஊர்ஜிதமா கிறது.

வெற்றிமாறன் தயாரித்திருக் கிறார். அவரிடம் பயின்ற லா.ராஜ்  குமார், மாறனின் மாணவர்   என்பதை நெத்தியடியாக உறுதி செய்கிறார்.

ஆர்.வேல்ராஜ்  சரியான கோணங்  களில் சரியான ஒளிப்பிரதி பலிப்பில் காட்சிகளை படமாக்கி யிருக்கும்விதம் கூடுதல் பலம்.

ஜல்லிக்கட்டு காட்சிகளை தத்ரூப மாக படமாக்கியிருக்கிறார் ஏ. மணிவண்ணன்.

சந்தோஷ் நாராயணன் மேற்பார்வையில் இசை காட்சி களோடு கொஞ்சி குலாவுகிறது.

எட்டு  எபிசோட்கள் கொண்ட  பேட்டைக்காளி ஒரு திரைப் படம்போவே உருவாகியிருக்கிறது.

ஆஹா  தமிழ் ஒடிடி  தளத்தில் பேட்டைக்காளி வெளியாகி யுள்ளது.

பேட்டைக்காளி – மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிட தமிழ் கலாச்சார பதிவு.

Related posts

52-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா: விண்ணப்பங்கள் வரவேற்பு

Jai Chandran

“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா..

Jai Chandran

ரஜினி மகள் இயக்க, கண்ணன் ரவியின் ‘டெக்ஸ்லா’ பட தொடக்க விழா..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend