ஆர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஏவிபி சினிமாஸ் சார்பில் ஆர். முத்துக்குமார் திரைக்கதை எழுதி இயக்கும் திகில் திரைப்படம் “நோக்க நோக்க.”
ஏற்கனவே இவர் தமிழில் தொடக்கம், வெண்ணிலாவின் அரங்கேற்றம், கன்னட திரையுலகில் பிரண்ட்லி பேபி, சாக்லேட் பாய், தெலுங்கில் ஸ்ரீரமுடு ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது “நோக்க நோக்க” என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
இதில் கதாநாயக னாக புதுமுகம் அர்ஜுன் சுந்தரம் அறிமுகமாகிறார் . கஹாரர்அச்சத்துடன் கூடிய திகில் திரைப்படமான இப்படத்தில் தொலைக்காட்சி ஊடகத்தில் பணிபுரியும் நேர்மையான கதாபாத்திரத்தில் ஜோதிராய் நடித்துள்ளார்.
இந்தியாவில் பண மதிப்பு இழப்பு அறிவித்த நேரத்தில் நடந்த சட்டவிரோத செயலை எதேச்சையாக கண்ட கதாநாயகி அதையொட்டி ஒரு செய்தித் தொகுப்பை ஆவணமாக்கி ஒளிபரப்புக்கு செல்லும் வேளையில் சமூக விரோதிகளால் கொலை செய்யப் படுகிறாள் அவளது ஒரு மகளையும் கயவர்கள் கொன்று விடுகின் றனர். நாயகியின் பெண் குழந்தையை எப்படி ஐந்து கயவர்களையும் பேயாக உருமாறி அவர்களை பழி வாங்குகிறார் என்பதை படத்தின் இயக்குனர் முத்துக்குமார் சிறப்பாக படமாக்கியுள்ளார். கதாநாயகன் கதாநாயகி நேர் மறை கதாபாத்தி ரங்களாக தோன்றுகிறார் கள். கஞ்சா கருப்பு, ஜாகுவார் தங்கம், அலிஷா, பாவனா, சிந்தியா, ஜோதிராய், சுரேஷ், அபி, பாண்டி பாஸ்கர், பேபி அமுல்யா முக்கிய கதாபாத் திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையை பத்மினி எழுதி உள்ளார் சிவசு வசனம் எழுதி உள்ளார் விஜய் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார் ஆல்டிரின் இசை யமைக்கிறார். அரவிந்த் பாபு எடிட்டிங் செய்கிறார். ஜாகுவார் விஜய் சண்டை பயிற்சி அளிக்கிறார். நோக்க நோக்க படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது இப்படத்தை ஆர் புரோடக்சன்ஸ் மற்றும் ஏவிபி சினிமாஸ் தயாரித்துள்ளது ஆர் வெங்கடராமன் இணை தயாரிப்பு செய்துள்ளார்.
“நோக்க நோக்க” திரைப் படத்தின் ஆடியோ வெளியிடப் பட்டது. இதில் கில்டு சங்க தலைவர் ஜாகுவார் தங்கம் . பிஆர் ஓ யூனியன் தலைவர் டைமண்டபாபு, நிர்வாகிகள் குமரேசன், கணேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.