நடிகை நிக்கி கல்ராணி மாடல் அழகியாக இருந்ததுடன் பேஷன் டிசைனிங்கும் கற்றவர். தமிழ், மலையாள படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 1983 என்ற படத்தில் நிவின் பாலே ஜோடியாக நடித்தார், இப்படம் 2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி திரைக்கு வந்தது.
தமிழில் டார்லிங், யாகாவராயினும் நா காக்க, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடிப்பில் ராஜவம்சம், வட்டம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. திரையுல்குக்கு வந்து இன்றுடன் 7 வருடம் ஆகும் நிக்கி கல்ராணிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து பகிர்ந்துள்ளனர். இன்று புது வீட்டுக்கு குடிபுகுந்தார்.