Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

படப்பிடிப்பில் வயிற்றை பார்த்து பேசிக் கொண்டிருந்த மிர்னால்

சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்  திரத்தில் நடித்த சபீர் கல்லர்க்கள் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் “பர்த் மார்க்” . மிர்னால் கதாநாயகி யாக நடிக்கிறார். தீப்தி,  இந்திரஜித்,  பொற்கொடி, பி.ஆர் வரலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

விக்ரம் ஸ்ரீதரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீராம் சிவராமன்,  விக்ரம் ஸ்ரீதரன்  கதை எழுதி தயாரித்து இருக்கின்றனர். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திர சேகர் இசையமைத்திருக்கிறார். இனியன் பாண்டியன் எடிட்டிங் செய்திருக்கிறார்.

இம்மாதம் திரைக்கு வரவுள்ள இப்படம் பற்றி இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீராம் சிவராமன் கூறியதாவது:

குழந்தை பிறப்பு என்பது பெண்களுக்கு ஒரு உயிர் போராட்டம்தான். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் இயற்கை முறையில் பிரசவிப்பது பற்றிய  படம். இயற்கை சூழ்நிலையில் இயற்கை யான முறையில் நார்மல் பிரசவம் செய்வது தொடர்பான கதையாக பர்த் மார்க் உருவாகி இருக்கிறது.

இதில் சபீர் கல்லர்கள் மற்றும் மிர்னால் ஜோடியாக நடித்திருக் கின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு பெரும்பகுதி கேரளாவில் மூணாறு பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் நடந்தது. மிர்னால்  கர்ப்பிணியாக நடித்திருக்கிறார். இதற்காக அவர் அர்ப்பணிப்பு மிகப் பெரியது. படப்பிடிப்பு ஓய்வு நேரத்திலும் கூட  அவர் தன்னுடைய கதாபாத்திரத் தில் தான் மூழ்கியிருப்பார்  கர்ப்பிணி தோற்றத்தில் அமர்ந்திருக்கும் அவர் தன் வயிற்றில் இருக்கும் குழந்தை யுடன் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார். இதற்கு காரணம் அந்தளவுக்கு அவர் அந்த கதாபாத்திரத்தில் மூழ்கியது.  யாருடன் பேசிக் கொண்டிருக் கிறார் என்று நாங்கள் பார்க்கும் போது அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசிக் கொண்டி ருப்பது தெரியும்.  அந்த அளவுக்கு அந்த பாத்திரத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதேபோல் சபீர் தனது கதாபாத் திரத்தை எவ்வளவு உள்வாங்கி நடிக்க முடியுமோ அவ்வளவு உள்வாங்கி வித்தியாசமான ஒரு  நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.   இந்திரஜித், தீப்தி , பொற்கொடி,  பி ஆர் வரலட்சுமி ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து  நடிப்பை வெளிப் படுத்தி உள்ளனர்.
இந்தப் படம் இயற்கை முறையி லான  பிரசவத்தை அதாவது நார்மல் டெலிவரி மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக் கிறது. ஆனால் இது எந்த நவீன மருத்துவத்திற்கும் எதிரான படம் இல்லை சிசேரியன் முறை .பிரசவம்.பற்றியும்  இப்படத்தில் பேசப்படவில்லை.

இயற்கை முறை பிரசவம் அந்த காலத்தில் நடைமுறையில் இருந்தது. இப்போதும்  குறைந்த அளவில் இதுபோன்ற பிரசவம்  நடக்கிறது.. கர்ப்பிணி பெண்ணை தண்ணீர் டப்பில்  அமர வைத்து கணவனும் அருகிலேயே இருந்து அவருக்கு ஊக்கம் கொடுத்து குழந்தையை பிரசவிப்பது  இயற்கையான முறையில் நடக்கும்.

பிரபல நடிகர் ஒருவரின் மனைவிக்கும் இதே முறைப்படி குழந்தை பிறந்தது. ஆனால் அந்த சம்பவத்திற்கு முன்பே இப்படத் தின் கதை உருவானது.  இரண்டுக்கும் சம்பந்தம்.இல்லை.

இப்படத்திற்கு விஷால் சந்திர சேகர் இசை அமைத்திருக்கிறார்  ஜீவனும் காதலும் இழையோடும் வித்தியாசமான அணுகு முறையில்   பாடல்களை தந்திருக் கிறார்.   பாடல்களை கேட்கும் போது மனம் உருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவுக்கு உணவுபூர்வமாக  பாடல்கள்  உருவாகி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேலு  இயற்கையான சூழலில் கண்களை குளிர வைக்கும் வகையில்  ஒளிப்பதிவு செய்து  மெய்மறக்க செய்திருக்கிறார். இது  மறுபிறப்பு கதையா என்று சிலர்  கேட்கிறார்கள். ஒரு வகையில் அப்படி கூட வைத்துக் கொள்ளலாம்.  அது பற்றியும் இதில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் இது ஹாரர் படம் கிடையாது.

பர்த் மார்க்  படத்தை பொறுத்த வரை ஒரு வித்தியாசமான முயற்சி என்று தான் சொல்ல வேண்டும் காட்சிகள்  எவ்வளவு எதார்த்தமாக படமாக்க முடியுமோ அவ்வளவு எதார்த்தமாக படமாக்கப்ட்டுள்ளது.
இம்மாதம் அதாவது பிப்ரவரியில் பர்த் மார்க் திரைக்கு வர உள்ளது. தணிக்கையிலும் இப்படத்திற்கு எந்த ஆட்சேபம் தெரிவிக்க வில்லை. இது எல்லா மொழி களுக்கும் பொருந்தும் கதை என்பதுதான் முக்கிய அம்சம். அனைவரையும் இப்படம் கவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related posts

ஏழை மாணவர்கள் எதிர்கால வாழ்க்கையை சூறையாடும் நீட் தேர்வு சூர்யா காட்டம்

Jai Chandran

VeeramaeVaagaiSoodum trailer is releasing today

Jai Chandran

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் திடீர் தள்ளிவைப்பு.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend