ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் காட்டேரி 25ம் தேதி வெளியாகவிருந்தது. அது திடீரென தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் பைபவ் ஹீரோவாக நடிக்கிறார். டீ கே இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து திகில் காமெடி காட்சிகள் வெளியாகி வரவேற்பை பெற்றன.
படம் தள்ளிவைக்கப்பட்டதுபற்றி பட நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா இரண்டாம் அலை பரவிவரு வதாக வெளியாகும் தகவல் களின் அடிப்படையில் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்க வேண்டி உள்ளது. இப்பொழுது நிலவும் குழப்பமான மற்றும் நிலையில்லாத் தன்மையை கருத்திக் கொண்டும். இத்திரைப்படத்தில் பணி யாற்றிய பல்வேறு தொழில் நுட்பக்கலைணர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் எங்கள் தயாரிப்பில் டிசம்பர் 25ம் தேதி வெளிவர இருக்கும் காட்டேரி திரைப்பட வெளி யீட்டை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்த கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் காட்டேரி திரைப்படம் வெளி யாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு காட்டேரி பட ரிலீஸ் தள்ளிவைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.