பட தயாரிப் பாளர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது: கோவிட் உள்ளிட்டப் பல தடைகளைத் தாண்டி இந்தப் படத்தை சிறப்பான ஒன்றாக இயக்குநர் கிருஷ்ணா கொடுத்திருக்கிறார். ’சில்லுன்னு ஒரு காதல்’ மூலம் எங்கள் பயணம் தொடங் கியது. இந்தப் படம் இன்றளவும் பல குடும்பங்களுக்குப் பிடித்த ஒன்று. அந்தப் படத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கிருஷ்ணாவுடன் இணைவதில் மகிழ்ச்சி. படம் நிச்சயம் வெற்றிய டையும். ரஹ்மான் சாருடன் எனக்கு இது மூன்றாவது படம். தொழில் நுட்பக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. சாயிஷாவுக்கு ஸ்பெஷல் நன்றி. தமிழ்நாட்டின் ரன்பீர் கபூர் என்று சொல்லும் அளவுக்கு வசீகர்ம் கெளதம் கார்த்திக் கிடம் இருக்கிறது. எனக்கு சூழ்நிலை சரியில்லாதபோது எஸ்.டி.ஆர். எனக்கு படம் பண்ணி கொடுத்தார். அவருக்கும் நன்றி. கமல்ஹாசன் சார் தயாரிப்பில் அடுத்து சிம்பு நடிக்க இருக்கும் படத்திற்கும் வாழ்த்துகள்!”.
இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா பேசிய தாவது: பலரும் இந்தப் படம் நன்றாக வரவேண்டும் என்று நினைத்தார்கள். அதன் பிரதிபலிப்பு தான் இது. மிகப் பெரிய பொருட் செலவில் இதனை ஞானவேல்ராஜா எடுத்திருக்கிறார். முதல் 15 நாட்கள் எடுத்துவிட்டு பிறகு, மீண்டும் ரீஷூட் செய்ய வேண்டும் என்பது சாதாரண விஷயம் கிடையாது. எஸ்.டி.ஆர்.ரை வைத்து படம் செய்வது சாதாரணம் கிடையாது. ஏனெனில், பார்வை யாளர்களுக்கு எதிர் பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். அதை நாம் திருப் திப்படுத்த வேண்டும். இது சிம்புவால் எனக்கு எளிதானது. செட்டில் வரும்போதே அவர் ஏ.ஜி.ஆர்ராகவே வாழ்ந்தார். இதற்காக என் நண்பன் எஸ்.டி.ஆர்.ருக்கு வாழ்த்துகள். கெளதம் கார்த்திக்கை நிறைய கொடுமைப் படுத்தி இருக்கிறேன். ஆக்ஷன், புழுதி என கடினமான சூழலில் அவருக்கு படப்பிடிப்பு நடத்தினோம். சிறப் பாக செய்திருக்கிறார். கெளதம் மேனன் என்னுடைய பாஸ். சிறப்பான வில்லன். இதுவரை பார்த்திராத ஒரு புதுமுகத்தைப் பார்க்கலாம். பிரியா பவானி ஷங்கருக்கும் நன்றி. எஸ்.டி.ஆர் ருக்கு தங்கை கதாபாத்திரம் நடிக்க தென்னிந்தியாவில் ஒரு நடிகையும் தயா ராக இல்லை. ஒத்துக் கொண்ட ஒரே நடிகை அனுசித்தாரா மட்டும்தான். அவருக்கும் நன்றி. மனுஷ்யபுத்திரனுக்கு கவிதை, அரசியல் என பல தளங்கள் காத்தி ருந்தும் என் நட்புக் காக ஓடிவந்தார். மதுகுருசாமிக்கும் நன்றி. கேட்டதும் சாயிஷா உடனே ஒத்துக்கொண்டு இந்தப் பாடலை செய்து கொடுத்தார். இந்தப் பாடல் இவ்வளவு நன்றாக வரக் காரணம் சாயிஷா, ரஹ்மான் இசை, பிருந்தா மாஸ்டர் மூவரும் தான். இப்போது படத்தின் பின்னணி இசையை ரஹ்மான் சார் செய்து கொண்டி ருக்கிறார். அது நிச்சயம் பேசப் படும்.என் தொழில் நுட்பக் குழு என்னு டைய பலம். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
வசனகர்த்தா ஆர்.எஸ். ராமகிருஷ்ணா பேசியதாவது: கிருஷ்ணா நல்ல இயக்குநர் என்பதை யும் தாண்டி நல்ல மனிதர். அவரிடம் எப்போதும் ஒரு செண்டிமெண்ட் உண்டு. அவர் வைத்து படம் செய்கிறவர் களுக்கு கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். அதுபோல நல்லது நடக்கும் என எதிர் பார்க்கலாம். ரஜினி சாரும் கமல் சாரும் கலந்த கலவையாக தான் சிம்பு சாரை பார்க்கிறேன். இந்தப் படத்தில் ‘நாயகன்’ கமல் சாரையும், ‘தளபதி’ ரஜினி யையும் பார்ப்பீர்கள். ’பத்து தல’ தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ட்ரேட் மார்க்காக இருக்கும். அனைவ ருக்கும் வாழ்த்துகள்”.
அடுத்ததாக, ஒளிப்பதி வாளர் ஃபரூக் ஜே. பாட்ஷா, “டீசர், ட்ரைய்லரில் பார்த்தது போல, படத்திலும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் சிம்பு மிகவும் ஈடுபாட் டோடு நடித்துக் கொடுத்தார். ஆதரவு கொடுத்த தொழில் நுட்பக் குழு அனைவ ருக்கும் நன்றி”.
நடிகர் கண்ணன் பொன்னையா பேசியதாவது:
எழுத்தாளர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசியதாவது: சினிமா மேடை எனக்கு புதிதானது. நண்பர் கிருஷ்ணாவுக்காக ஒத்துக் கொண்டேன். சினிமாவை வெளி யில் இருந்து பார்த்த எனக்கு உள்ளிருந்து வேலை செய்வது புதிதாக இருந்தது. இந்தப் படம் மாஸ் எண்டர்டெயினராக வர இயக்குநரும் குழுவும் அவ்வளவு உழைப்பைக் கொடுத் துள்ளார்கள். ஆக்ஷன் சொன் னதும் எஸ்.டி.ஆர். வேறொருவராக மாறி விடுவார். நடிப்பு அவரது இரத்தத்தில் ஊறி இருக்கிறது. ரஹ்மான் சார் இசை யில் நான் பாட்டெழுத தான் ஆசைப்பட் டேன். ஆனால், நடிப் பேன் என எதிர்பார்க்க வில்லை. படம் வெற்றியடைய வாழ்த்துகள்”
நடிகர் சவுந்தர்குமார் பேசியதாவது: இந்தப் படம் நான் ஒத்துக் கொள்ள முக்கிய காரணம் எஸ்.டி.ஆர்., இயக்குநர் கிருஷ்ணா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் சார். ரசிச்சு ரசிச்சு பார்த்த எஸ்.டி.ஆருடன் படம் முழுக்க அவருடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்றதும் மகிழ்ச்சியாக இருந் தது. பிறகு நான்கு நாட்களில் அழைப்பு வரவில்லை. இயக்கு நரை மீண்டும் சந்தித் தேன். சின்ன ரோல் இருக்கிறது என்று சொன்னார். ’அடுத்தப் படங்களில் பெரிய வாய்ப்பு வேண்டும்’ என்ற வேண்டு கோளோடு ஒத்துக் கொண்டேன். இயக்குநர் எந்தவித டென்ஷனும் இல்லாமல் அழகாக படத்தை முடித்துக் கொடுத்துள்ளார். மிகப்பெரிய பாடம் கற்றுக் கொண்டேன். ஞானவேல் சார் கதை பிடித்திருந்தால் படத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவர். படத்தின் அடுத்த பார்ட் வரவேண்டும்”
நடிகர் ரெடின் கிங்க்ஸ்லே பேசிய தாவது: பத்து வருடங் களுக்கு முன்பே சிம்பு சாருடன் ‘வேட்டை மன்னன்’ நடித்து வெளி வந்திருக்க வேண்டும். ஆனால், ‘பத்து தல’யில்தான் அது அமைந்தி ருக்கிறது. வாய்ப்பு கொடுத்த இயக்கு நருக்கும் தயாரிப்பா ளருக்கும் நன்றி. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள். கெளதம் சார் நாலு மணிக்கே எழுந்து ஆக்ஷன் காட்சிகளுக்கு தயாராவார். அப்படி யான திறமையான நடிகர் அவர். ரஜினி சாரிடமும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிய டையும் என சொல்லி இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி”.
நடிகை சாயிஷா பேசியதாவது: நான் மீண்டும் என் வீட்டுக்கு வந்தது போல ஒரு உணர்வு ‘பத்து தல’ படப்பிடிப் பில் ஏற்பட்டது. இந்த சூப்பரான பாடலை ரஹ்மான் சார் இசையில் பிருந்தா மாஸ்டர் நடன அமைப்பில் கொடுத் ததற்கு நன்றி. கெளதம் இந்தப் படத்தில் வேறு நபராக இருக்கிறார். அவரது உழைப்புக்கு வாழ்த் துகள். எஸ்.டி.ஆருடன் நான் சேர்ந்து நடித்த தில்லை. ஆனால், அவரது இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது மகிழ்ச்சி. கடைசியாக எனக்கு எல்லாவித மான ஆதரவும் கொடுத்த என் கணவர் ஆர்யாவுக்கு நன்றி. அவர் சொல்லிதான் இந்தப் பாடல் நான் செய்தேன். அவரைப் போன்ற ஒரு கணவர் கிடைத்ததுக்கு நான் கொடுத்திருக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் இந்தப் பாடல் நிச்சயம் பிடிக்கும்”.
நடிகர் மதுகுருசாமி பேசியதாவது: கன்னட ‘மஃப்டி’ படத்தில் சிங்கா எனும் கதாபாத்திரத்தை தமிழிலும் நான் நடித் திருக்கிறேன். கன்னடத்தில் நிறைய படங்கள் நடித்திருக் கிறேன். தமிழில் ‘பத்து தல’ என் முதல் படம். இந்த வாய்ப்புக் கொடுத்த தயாரிப் பாளர் ஞானவேல் சாருக்கு நன்றி. கிருஷ்ணா சார் ‘பத்து தல’ படத்தை அருமை யாக எடுத்திருக்கிறார். எஸ்.டி.ஆர். சாரிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். உங்கள் அனைவருக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும்”.
நடிகர் கெளதம் கார்த்திக் பேசியதா வது: பத்து தல படத்தில் எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. கிருஷ்ணா சாரும் அவரது டீமும் அருமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். என்னுடைய மொத்தத் தோற்றத்தையுமே மாற்றி இருக்கிறார் கள். இந்த கதாபாத் திரத்தில் என்னை பார்க்கும்போதே பெருமையாக இருக் கிறது. என்னை கொடுமைப் படுத்தி இருப்பதாக இயக்குநர் சொன்னார். இந்த தொழிலுக்கு வந்து விட்டு வேலைப் பார்ப்பதை எப்போதும் நான் கொடுமையாகவே நினைத்தது இல்லை. நான் பிறப்பதற்கு முன்பே என் தாத்தா இறந்து விட்டார். அவரது தொழிலில் நான் இறங்கி பார்க்கி றேன் என்றால் அதை விட வேறு சந்தோஷம் இல்லை. இது என் கோயில். அதுதான் எனக்கு சாப்பாடு
போடுகிறது . அதற் காக எந்த விஷயத் தையும் நான் தாங்கிக் கொள்வேன். சாயிஷா வுடன் நடனம் ஆட பயமாக இருந்தது. சாயிஷாவுக்கு இணை யாக நடனம் ஆட முடியாது என பிருந்தா மாஸ்டரிடம் கேட்டு எனக்கு நடனத்தைக் குறைத்துக் கொண் டேன்.அடுத்து சிம்பு அண்ணன். இசை வெளியீட்டு விழாவில் அவர் என்னைப் பற்றி பேசியதை கேட்டு நான் அழுதுவிட்டேன். அவருடைய ரசிகர் களில் நானும் ஒருவன். படப்பிடிப் புத் தளத்தில் வேலை யையும் மீறி அவர் என்னிடம் சில கதை களை சொன்னார். அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. என்ன கதாபாத்திரம் என்றாலும் சரி அவர் எப்போது கூப்பிட் டாலும் சம்பளமே வாங்காமல் செல்லத் தயாராக இருக்கிறேன். கூப்பிடுங்கள் அண்ணா. திரையரங் குகளில் ‘பத்து தல’ பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
நடிகர் சிலம்பரசன் பேசியதாவது:
