Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நாய் சேகர் (பட விமர்சனம்)

படம்: நாய் சேகர்

நடிப்பு: சதீஷ், பவித்ரா லட்சுமி, ஜார்ஜ் மரியான், மனோபாலா, லிவிங்ஸ்டன் , ஞானசம்பந்தம், இளவரசு, ஸ்ரீமன், சங்கர் கணேஷ், லொள்ளு சபா சுவாமிநாதன், வினோதினி வைத்தியநாதன், சுனிதா,

தயாரிப்பு: ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ்

இசை : அஜீஷ் அனிருத்

ஒளிப்பதிவு: பிரவின் பாலு

இயக்கம்: கிஷோர் ராஜ்குமார்.

பி ஆர் ஒ :நிகில்

விலங்குகள் மரபணு ஆராய்ச்சி செய்பவர் ஜார்ஜ் மரியான். சட்டத்துக்கு புறம்பான செயல்பாடுகளில் ஈடுபட்ட குற்றச் சாட்டால் இவரது ஆராய்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சதீஷ். ஐ டி கம்பெனி யில் வேலை செய்கிறார். ஒருமுறை சதீஷை பக்கத்துவீட்டு நாய் கடித்துவிட நாயின் குணங்கள் சதீஷுக்கு வந்துவிடு கிறது. அதேசமயம் சதீஷின் குணம் நாய்க்கு சென்றுவிடுகிறது. மாற்று மருந்து கொடுத்து சதீஷை மீட்க முயற்சிகள் நடக்கிறது . இதற்கிடையில் நாயின் குணத்தால் சதீஷ் படும் அவஸ்தைகள் எக்கச்சக்கம். அதிலிருந்து அவர் மீண்டாரா என்பதை கலகலப்புடன் விளக்குகிறது கிளைமாக்ஸ்.

பல படங்களில் பிரபல ஹீரோக்களின் நண்பராக நடித்து எதர்த்தமாக பேசி காமெடி செய்து சிரிக்க வைத்து வந்த சதீஷ் இப்படத்தில் புரமோஷன் ஆகி கதாநாய கனாக மாறி இருக்கிறார். தனி ஆளாக காமெடியை கையிலெடுத்திருந்தாலும் அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். நாய் கடித்தபிறகு சதீஷின் நடிப்பே முற்றிலும் மாறிவிடுகிறது.

நாய்வேஷம் போட்டல் குரைத்துதான் ஆகவேண்டும் என்ற பழமொழிப்படி நாய் வேஷம் போட்டிருக்கும் சதீஷ் வெட்கப் படாமல் நடிப்பை நயமாக வெளிப் படுத்தி இருக்கிறார்.
நாய் போல சேட்டைகள் செய்வது, எலும்பு துண்டுக்கு குப்பை தொட்டியில் தாவுவது, கம்பத்தை பார்த்தவுடன் காலை தூக்கிக்கொண்டு சிறுநீர் கழிப்பது என இஷ்டத்துக்கும் நாய் சேட்டைகள் செய்து அரங்கையே சிரிப்பால் மூழ்கடிக்கிறார்.

’நீங்க என்ன சாதி’ என்றவுடன் லேப்ரடார் என்று நாயின் ஜாதியை டக்கென சொல்லி சிரிப்பில் திணறடிக்கச் செய்கிறார்.

நாய்க்கு பேசும் சக்தி வந்துவிட அது பேசுவதும் அதற்கேற்ப மிர்ச்சி சிவா பின்னணி குரல் கொடுத்திருப்பதும் சிரிப்புபோனஸ்

.முதல் பாதியில் கொஞ்சம் திணறும் திரைக்கதை பிற்பாதியில் காமெடி ஜெட்டாக பறக்கிறது. சதீஷ் குணமடைய மாற்று மருந்து தயாரான நிலையில் நாய் காணாமல் போவது தொடர் காமெடி.

ஹீரோயின் பவித்ரா லட்சுமி குக்வித் கோமாளி சீசன் 2ல் பங்கேற்று பிரபலம் ஆனவர். பவித்ராவும் சதீஷுக்கு ஈடுகொடுத்து பெயரை தட்டிச் செல்கிறார்.
இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் நீண்ட வருடங்களுக்கு பிறகு மாறுபட்ட பாத்திரத்தில் நடித்திருப்பது வரவேற்பு பெற்றிருக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை லாஜிக் பார்க்காமல் சிரிக்க வைக்க என்ன வெல்லாம் செய்ய முடியுமோ அவ்வள வையும் செய்து அனைத்து வயதினருக்கு மான படமாக இயக்கி இருக்கிறார் கிஷோர் ராஜ்குமார். அத்துடன் முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்.
அஜீஷ் அனிருத் இசை பங்களிப்பு கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கிறது.
அதேபோல் ஒளிப்பதிவாளர் பிரவின் பாலுவின் கைவண்ணமும் படத்தை கலர்புல்லாக்கி இருக்கிறது.
ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.
நாய் சேகர் – கொரோனா ஒமைக்ரான் டென்ஷனை மறந்து சிரித்துவிட்டு வரலாம்.

 

 

Related posts

Ezhil directorial Vimal Starrer “DesinguRaja-2”

Jai Chandran

அகில், யோகி பாபு நடிக்கும் ”எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா”

Jai Chandran

தேசிய விருது வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend