Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவகார்த்திகேயன் வழிகாட்டுதலில் உ.வே.சா நூலகத்திற்கு சிறப்பு ஆய்வு சுற்றுலா..

தமிழின் தொன்மை, கலை மற்றும் இலக்கியப் பண்பாட்டின் மீது பேரார்வம் கொண்ட நடிகரும்,தயாரிப்பாளருமான திரு. சிவகார்த்திகேயன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தென் சென்னை கிழக்கு மாவட்ட நற்பணி இயக்கத்தின் ‘கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவு’ சார்பில் சென்னை பெசன்ட் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தமிழ் தாத்தா’ உ.வே.சா நூலகத்திற்கு சிறப்பு ஆய்வு சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது.

நமது செம்மொழி தமிழின் மாண்பையும், பழம்பெரும் வரலாற்றையும் இன்றைய தலைமுறையினரும், நற்பணி இயக்கத்தை சார்ந்த தோழர்களும் ஆழமாக உணர்ந்து அறிந்து கொள்ளும் உயரிய நோக்கத்தோடு இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இப்பயணத்தின் போது, சங்க இலக்கியங்களையும் அரிய ஓலைச்சுவடிகளையும் தேடித்தேடி தொகுத்து தமிழுக்கு உயிர்கொடுத்த தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் அரிய நூல்கள், பழங்கால சுவடிகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள முறைகளை நூலக நிர்வாகிகள் நற்பணி இயக்கத்தின் கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவின் நிர்வாகிகளுக்கு முழுமையாக விவரித்து விளக்கமளித்தனர்.

Related posts

Conjuring Kannappan’ is the title of comedy-horror-fantasy

Jai Chandran

தேர்தல் வாக்குறுதிகள், பட்ஜெட்டில் திட்டங்களாகுமா? மநீம கேள்வி

Jai Chandran

C V Kumar, B T Arasakumar come together for Idumbankaari

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend