Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கொம்பு வச்ச சிங்கமடா (பட விமர்சனம்)

படம்:கொம்பு வச்ச சிங்கமடா

நடிப்பு: சசிகுமார், மடோனா செபாஸ்டியன், மகேந்திரன், ஹரீச்க் பெராடி, சூரி, இந்தர்குமார், தீபா, லீலா பாட்டி, ராகவ், விஜய், சரவணன், சந்தோஷ், கிருஷ்ணன், லோகு, அருள்தாஸ், சங்கிலி முருகன், ஸ்ரீபிரியங்கா, ரஞ்சனா நாச்சியார்

தயாரிப்பு: இந்தர்குமார்

ஒளிப்பதிவு: எம்.கே.ஏகாம்பரம்

இசை: திபு திணன் தாமஸ்

இயக்கம்: எஸ்.ஆர். பிரபாகரன்

பி ஆர் ஒ : நிகில்

கரூர் பகுதியில் உள்ள ஊரில் தெய்வேந்திரன் (இயக்குனர் மகேந்திரன்), வேலப்பன் (ஹரிஷ் பெராடி) இருவரும் பெரிய மனிதர்களாக ஊர்மக்களால் மதிக்கப்படுகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் நடக்கும் நிலையில் யார் போட்டியிடுவது என்ற சர்ச்சை ஏற்படுகிறது. இதற்கிடையில் தெய்வேந்திரன் மகனுக்கும் (சசிகுமார்) வேலப்பன் மகளுக்கும் (மடோனா ) காதல் மலர்கிறது. இந்த காதலுக்கு வேலப்பன் பச்சைகொடி காட்டினாலும் உள்ளாட்சி தேர்தலில் தனக்கு சாதகமாக இருக்கும்படி உறுதி கேட்டு வாங்குகிறார். இந்நிலையில் மற்றொரு ஜாதியின் சார்பில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்கின்றனர். தேர்தல் முடிந்தபின் நடக்கும் மோதலில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதற்கு பழி வாங்க துடிக்கும் கும்பலும் அந்த கும்பலிடமிருந்து தனது நண்பரை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார் தெய்வேந்திரன் மகன். அவரால் தனது நண்பர்களை காப்பாற்ற முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

தந்தை பெரியாரின் சாதிய ஒழிப்பு கருத்தை மையமாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்,.ஆர் .பிரபாகரன். அதை சுவற்றில் பெரிய ஓவியமாக தீட்டி திரையில் காட்சிபடுத்தியிருக்கும் துணிச்சலுக்கு ஒரு அப்ளாஸ். சாதி பிரச்னையை மையமாக கொண்ட கதை என்றாலும் அதுபற்றி வெளிப் படையாக பேச முடியாமல் பல இடங் களில் சூசகமாக சுட்டிக் காட்டினாலும் குறிப்பால் அதனை உணர முடிகிறது.

கருஞ்சட்டை அணிந்து வித்தியாசமான தோற்றத்துடன் சசிகுமார் நடித்திருக்கிறார். அவரது அந்த தோற்றமும், பேசும் வசனங்களும் சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தனது நண்பர்களுடன் சாதி இல்லா சமுதாயம் உருவாக்க மேற்கொள்ளும் முயற்சிகள், இரட்டை குவலை ஒழிப்பை அமல்படுத்துவது என புரட்சிகரமான நடிப்பில் சசிகுமார் ஒரு படி உயர்ந்து நிற்கிறார்.

தனது நண்பரை கொல்ல ஜீப்பில் விரட்டி வரும் ரவுடிகளை தனி இடத்தில் வழி மடக்கி அவர்களை அடித்து துவம்சம் செய்து ஆக்‌ஷன் காட்சியில் ஆக்ரோஷம் காட்டி இருக்கிறார் சசிகுமார்.

ஒருபக்கம் சமுதாய சீர்திருத்தம் பேசும் சசிகுமார் மறுபக்கம் தனது காதலை மடோனா செபாஸ்டினிடம் வெளிப் படுத்த திணறும்போது கலகலக்க வைக்கிறார்.
ஹீரோயினாக வரும் மடோனா செபாஸ் டியன் முதலில் மோதல் பின்னர் காதல் என்ற பாத்திரத்தில் ஐக்கியமாகி இருக்கிறார்.

சசிகுமாரின் நண்பராக வரும் சூரி நகைச்சுவை பேசி அரங்கை கலகலப் பாக்குகிறார். சசிகுமாரின் காதலை நக்கலடிக்கும்போது அரங்கை குபீர் சிரிப்பில் ஆழ்த்துகிறார். தயாரிப்பாளர் இந்தர்குமார் முக்கிய வேடம் ஏற்றிருக்கி றார். வில்லன் தோற்றமாக இருந்தாலும் கதாபாத்திரத்தை அலட்டல் காட்டி கெடுக்காமல் அடக்கி வாசித்திருக்கிறார்.

எஸ்.ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் சமுதாய அக்கறை மேலோங்கி யார் இந்த கருஞ்சட்டை சிங்கம் என கேட்க வைத்திருக்கிறார்.

எம் கே ஏகாம்பரத்தின் தெளிவான ஒளிப்பதிவு காட்சிகளை கண்ணாடிபோல் பளபளக்க வைக்கிறது.  : திபு திணன் தாமஸ் இசை  ரசிக்க வைக்கிறது.

கொம்பு வச்ச சிங்கமடா – சீவிய கூர் மழுங்காத சீற்றம் கொண்ட சிங்கம்.

 

Related posts

Ajay Devgn and Dil Raju all set to collaborate

Jai Chandran

Keerthy Suresh and Radhika Apte in Akka

Jai Chandran

நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே வில்லனான ராபர்ட் டவுனி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend