Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகை மீரா மிதுனுக்கு நடிகர் எம். எஸ். பாஸ்கர எதிர்ப்பு

நடிகைமீரா மீரா மிதுன் பேச்சுக்கு நடிகர் எம். எஸ்.பாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:

என்னவாயிற்றுஇந்த பெண்ணுக்கு..

உன் போதைக்கு நான் ஊறுகாயா? என்று காமெடியாக கேட்பார்கள்.

ஆனால் இவர் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல.
வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம்.

சாதிப் பெயரை சொல்லி பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது.

எவ்வளவோ சாதித்தவர்கள் பலர் அடக்கமாக இருக்கும் போது
இவர் ஏன் இவ்வளவு ஆணவமாக பேசுகிறார்?

சாதனைக்கும்,
அறிவுக்கும், சாதிக்கும் சம்பந்தம் ஏது?

பெருமதிப்பிற்குரிய என் தெய்வம் ‘கலைஞானி’
திரு.கமலஹாசன் அவர்கள் தன்னை ஒரு படத்திலிருந்து ஒதுக்கித்தள்ளி விட்டார் என்று இவர் கூறியிருப்பதை கேட்டு அழுவதா, சிரிப்பதா?

ஈர்க்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா? என்ன மூடத்தனமான பேச்சு இது?

தளபதி திரு.விஜய், தம்பி திரு.சூர்யா ஆகியோர் பண்பின் சிகரங்கள். அவர்களுக்கு அடுத்து இவரது வசைபாடலில் இன்று கலைஞானி அவர்களா?

“குறிப்பிட்ட சாதியினரை திரை உலகை விட்டு துரத்த வேண்டும்” என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?
இவரது பேச்சு மனதை புண்படுத்தும் விஷயம் மட்டுமல்ல… மடத்தனம். அகங்காரத்தின் உச்சம்.
மற்றவர்கள் மனதை புண்படுத்தி விளம்பரம் தேடுவது கயமைத்தனம். இத்தகைய பேட்டிகளை யூ ட்யூப் சேனல்கள் புறக்கணித்தாலே இப்படிப்பட்ட வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடலாம்.
மிகுந்த மனவேதனையோடு வன்மையாக இவரை கண்டிக்கிறேன்.
இனியாவது இவர் நாவடக்கத்தோடு இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

-அன்பன் எம்.எஸ்.பாஸ்கர்.(நடிகர்)
🙏🙏🙏🙏🙏

Related posts

ஹாலிவுட் சண்டை பயிற்சியாளரை அசத்திய சமந்தா

Jai Chandran

போக்குவரத்து பணியாளர்களின் வாக்குறுதி நிறைவேற்றுக: மநீம அறிக்கை

Jai Chandran

ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிய மாமனிதன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend