Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராமேஸ்வரம் அருகே மீண்டும் ஒரு கொடூரம்: எம்.எஸ்.பாஸ்கர்

மீண்டும் ஒரு கொடூரமான சம்பவம் ராமேஸ்வரம் அருகே நிகழ்த்தப்பட்டிருக் கிறது. என்றார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அவர் கூறியதாவது:

கடல்பாசி எடுக்கச்சென்ற மீனவ சகோதரி, இரண்டு குழந்தைகளுக்கு தாய் , கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். அங்கு இறால் பண்ணையில் வேலை செய்யும் வடநாட்டு இளைஞர்கள்தான் இதற்கு காரணம் என்று செய்திகள் வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பே அந்தப்பெண்ணை அவர்கள் கிண்டல் செய்ததாக ஒரு பிரச்சினை எழுந்து பின் அடங்கியிருக்கிறது.

அப்போதே காவல்துறையில் இந்தப் பெண் பக்கமிருந்து புகாரளிக்காமல் ஏன் விட்டார்கள் என்ற காரணம் தெரிய வில்லை. ஃபோனில் ஏமாற்றுவது.. வங்கிக்கொள்ளை  ஏ டி எம்  இயந்திரத் தை உடைப்பது, கற்பழிப்பு.. கொலை போன்ற சகல குற்றங்களிலும் வட இந்தியர்கள் கைவரிசை இருக்கிறது..

தீர விசாரித்து குற்றவாளிகள் யாராயினும், எத்தனை பேராயினும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்று அரசாங்கத்தையும், எனது அன்பு அண்ணன், மரியாதைக்குரிய மாண்புமிகு.முதல்வர் அவர்களையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

-இவ்வாறு எம்.எஸ்.பாஸ்கர்  கூறினார்.

Related posts

டார்க் (பட விமர்சனம்)

Jai Chandran

Prime Video Unveils Gripping Trailer of Snakes & Ladders

Jai Chandran

PUPG Trailer on 15 th August

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend