Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சித்தா (பட விமர்சனம்)

படம்: சித்தா

நடிப்பு: சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஶ்ரீ
எஸ்.ஆபியா தஸ்னீம்
பாலாஜி

தயாரிப்பு: சித்தார்த்

இசை: சந்தோஷ நாராயணன், விஷால் சந்திரசேகர், திபு நைனன்  தாமஸ்

ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம்

இயக்கம்:  எஸ்.யூ.அருண்குமார்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா (D’one), ரேகா, நாசர்

அண்ணன் மறைந்த நிலையில் அவரது குழந்தை சேட்டை மீது உயிரையே வைத்திருக்கிறான் ஈஸ்வரன் என்கிற சித்தா  ( சித்தார்த்). குழந்தையும் சித்தா, சித்தா என்று பாசமாக அழைத்து எப்போதும் கூடவே ஒட்டிக்கொள் கிறது. ஒரு சமயம் சேட்டையின் தோழி மனசோர்வாக இருக்கும் போது  அவரை அவரது வீட்டில் விட்டுவர அழைத்துச் செல்கிறான் ஈஸ்வரன். அப்போது குழந்தை யிடம் தகாத முறையில் நடந்ததாக அபாண்டம் சுமத்தப்படுகிறது. விவகாரம் போலீஸ் வரை செல்கி றது. ஒரு.கட்டத்தில் உண்மை புரிய வர ஈஸ்வரன் சகஜ நிலைக்கு வருகிறான். அதே.சமயம் அவன் பாசம்.காட்டும் சேட்டையை மர்ம மனிதன் கடத்துகிறான். அதிர்ச்சி அடையும் ஈஸ்வரன் அண்ணன் குழந்தையை தேடி அலைகிறான்.. நாட்கள் கடக்கிறது. போலீஸ் ஒரு.பக்கம், ஈஸ்வரன் உள்ளிட்ட  நண்பர்கள் ஒரு பக்கம் என சேட்டையை தேடுகின்றனர் .அப்போது ஒரு சடலம் கண்டெடுக். கப்படுகிறது. காணாமல் போன குழந்தை கிடைத்ததா?  இறந்து கிடந்த சிறுமி யார்? கடைசியில் குழந்தையின் கதி என்னவானது என்ற பல கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

பாய்ஸ் தொடங்கி.சித்தார்த் இதுவரைபல படங்கள் நடித்திருக் கிறார்  அதிலெல்லாம் ஒரு நடிகராகவே தெரிந்திருக்கிறார். ஆனால் சித்தா படத்தில் சித்தா என்ற பாத்திரமாகவே அவர் மாறியிருக்கிறார்.

அண்ணன் குழந்தை மீது சித்தார்த் காட்டும் அளவில்லா அன்பு அரங்கு முழுவதும் பரவுகிறது. வகுப்பில் முட்டி போட வைத்ததற்காக பிரின்ஸ்பாலிடம் கோபம் காட்டும் சித்தார்த் குழந்தையை வண்டி யில் அமர்த்திக்கொண்டு ஊர் சுற்றுவதும், அருகிலேயே படுக்க வைத்துக்கொள்வதுமாக ஒரு தந்தைபோல் பாசத்தை வெளிப் படுத்தி கவர்கிறார்.

அண்ணன் .மகளின் தோழியிடம் தான் தவறாக நடந்துக் கொண்டதாக அந்த குழந்தையின் உறவினர்கள் தாக்க  “நான் ஒண்ணும் பண்ணல” என்று புலம்புவதும் , போலீஸ் நிலைய வளாகத்துக்குள் தன் நண்பனே தன் மீது சந்தேகப்பட்டு தாக்கும் போது அடிபட்டு விழுவதுமாக உருக வைக்கிறார். இதுபோன்ற பாத்திரங்களில் கமல்ஹாசன்தான் துணிச்சலாக நடிப்பார். அந்த துணிச்சல் சித்தார்த்துக்கும் வந்திருப்பது ஆச்சர்யம்தான்.

அண்ணன் மகளை கடத்தி விட்டார்கள் என்று தெரிந்ததும் பதறிப்போகும்  சித்தார்த் குழந்தையை தேடி தெருத்தெரு வாக அலைவதும் மார்ச்சுவரியில் இருக்கும் சடலத்தை போலீசார் உன் அண்ணன் குழந்தைதான் என்று கூறியபோதும. இல்லை என்று சித்தார்த் மறுத்து மீண்டும் குழந்தையைத்  தேடத் தொடங்கு. வதும்  பரபரப்பு.

கிளைமாக்சில் சித்தார்த் எடுக்கும் முடிவை சட்டமும் எடுத்தால் இதுபோன்ற கொடூரங்கள் அட்டூழியம் அறவே ஒழியும் என்பதில் சந்தேகமில்லை.

சேட்டையாகவும் அவரது தோழியாகவும் நடித்திருக்கும் சஹஷ்ரா ஶ்ரீ, எஸ்.ஆபியா தஸ்னீம் இந்த வயதில் இப்படியொரு பாத்திரத்தில் நடிக்க எப்படித்தான் பயிற்சி எடுத்தார்களோ என்று ஆச்சர்யப்பட வைக்கின்றனர்.

சித்தார்த்தின் அண்ணியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயர். காதலியாக நடித்திருக்கும் நிமிஷம்  சஜயன் இருவரும்  சினிமாத்தனமில்லாத முகங்கள் என்பதால் அன்றாடம் எங்கோ ஒரு சில இடங்களில் பார்க்கும். நிஜமுகங்களாக பதிவதுடன் ஆழமான நடிப்பை வெளியிட்டி ருக்கின்றனர்.  இந்த முகங்களும், காஸ்டியுமும்தான்  படம் பார்க்கி றோம் என்ற உணர்வை ஏற்படுத் தாமல்  நிஜ சம்பவம்.ஒன்றை அருகிலிருந்து பார்த்த உணர்வை தருகிறது.

சந்தோஷ நாராயணன், விஷால் சந்திரசேகர், திபு நைனன்  தாமஸ் டைட்டில் பாடல், சக பாடல் பின்னணி இசை என்று  அருமை யான நகர்வுகளை தருகின்றனர்

பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு ஜிகினா வேலைகளை காட்டாமல். பழனியின்  எதார்த்த தெருக் களுக்கு அழைத்துச் செல்கிறார்.

இயக்குனர் எஸ்.யூ.அருண்குமார்  இப்படியொரு படத்தை எந்த தவறான எண்ணமும் உருவாகாத வகையில் திரைக்கதை அமைத்து குழந்தைகளுக்கு எது குட் டச், எது பேட் டச் என்று புரியும் வகையில் படத்தை இயக்கியமைக்கு ஒரு  கைகுலுக்கல் தரலாம்.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் படத்தை ரிலீஸ் செய்வதிலிருந்தே படத்தின் தரம் வெளிப்படுகிறது

சித்தா – பெண்  குழந்தைகளுக் கான  கவன ஈர்ப்பு.

 

 

 

 

 

 

Related posts

ECHO Teaser will be launched by R.Parthiepan & Vijayantony Today

Jai Chandran

விதார்த் மற்றும் லக்ஷ்மி பிரியாாபுதிய படம் தொடக்கம்

Jai Chandran

Sarathkumar’s IRAI Web Series on Aha OTT

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend