தமிழகம்: மே 3க்கு பிறகு ஊரடங்கு தொடரும்?
அரசு அறிவிக்கப்போகும் முடிவு என்ன..
சென்னை, ஏப் :
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு இந்தியா முழுவதும் அமலில் உள்ளது. 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா என்ற சந்தேகம் பரவலாக மக்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா ஊரடங்கை தளர்த்தலாமா அல்லவா? என்று மருத்துவ நிபுணர் குழுவுடன் வீடியோ மூலம் ஆலோசனை நடத்தி னார்.
பின்னர் இது குறித்து கூறிய மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர், ‘ கொரோனா தொற்று குறைந்தபாடில் லை. அது இன்னும் நீண்ட நாள் இருக்கும் அறிகுறிதான் தென்படு கிறது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு முழுமையாக நீக்க வாய்ப்பு கிடையாது. முககவசம் அணிவது, சமூக இடைவெளி தொடர்ந்து பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது
சுகாதார குழு கொரோனா பரவலை தீவிரமாக கண்காணிக்கிறது. அதன் தாக்கம் குறைந்திருக்கிறதா என்பதை பொறுத்தான் படிப்படியாக ஊரடங்கை குறைப்பது பற்றி முடிவு செய்யப்படும். இது குறித்து அரசு முடிவு செய்யும்’ என்றார்.
தமிழகத்தில் ஊரடங்கு பின்பற்றப்பட் டாலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கி றது.
161 பேருக்கு தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக இந்தியா முழுவதும் கொரோனாவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 33,610 ஆக உயர்ந் திருக்கிறது.
#after May 3rd corono lockdown will continue in TamailNadu