Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அனந்தன் காடு (பட விமர்சனம் )

படம்: அனந்தன் காடு

நடிப்பு: ஆர்யா, நிகில விமல், ரெஜினா,  சுனில்  இந்திரன்ஸ்,  சித்திக், அஜய், போஸ் வெங்கட்,  தேவ் மோகன்,  ரெஞ்ஜி பணிக்கர்

தயாரிப்பு  எஸ் வினோத்குமார்

இசை: பி. அஜனிஷ் லோக்நாத்

ஒளிப்பதிவு : எஸ். யு வா

இயக்கம்:ஜியன் கிருஷ்ணகுமார்

பி ஆர் ஒ : ரியாஸ், பாரஸ்

கதை :இலங்கை போராளி வெற்றிவேல் முருகன் (ஆர்யா ) இலங்கை படையிடமிருந்து தப்பி இந்தியா வருகிறார்  அவருக்கு கேரளாவில் ஒரு சிறு ரவுடி கூட்டம் அடைக்கலம் தருகிறது. தனக்கு பிடிக்காதவர்களை இந்த ரவுடி கூட்டத்தை வைத்து போட்டு தள்கிறார் அம்மாநில முதல்வர்  ஒரு கட்டத்தில் இந்த பிரச்னை சிபிஐ வரை செல்கிறது. ரவுடி கூட்டம் பிடிபட்டால் தன் குட்டு அம்பலமாகிவிடும் என்று எண்ணும் முதல்வர் ரவுடி கூட்டத்தை போலீசை வைத்து என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார். அந்தக் கூட்டம் பாதிக்கப்படும்போது அவர்களிடம் அடைக்கலமாக இருந்த வெற்றிவேல் முருகன் போலீசையும் மற்றும் அடியாட்களையும் எதிர்த்து எப்படி தாக்குதல் நடத்துகிறார் என்பது தான் கிளைமாக்ஸ்..

இலங்கையில் தொடங்கி தமிழகம், கேரளா,  ராஜஸ்தான் என இப்படத்தின் காட்சிகள் நீள்கிறது.

ஆர்யா ஒரு போராளியாக  இருந்தாலும் தனக்கு அடைக்கலம் தரும்  ரவுடி கூட்டத்தின் பாசத்திற்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு துணையாக நிற்பதும், அவர்களுக்கு ஆபத்து வரும்போது அதை எதிர்த்து தாக்குதல் நடத்துவதும் சூழல் தவறாக இருந்தாலும் பாசத்துக்கான நியாயத்தை ஆரியா வெளிப்படுத்துவதாகவே தோன்றுகிறது.

பெரும் பணக்காரர் ஒருவரை  ஆர்யா கூட்டம் அதிரடியாக தாக்குவது பரபரப்பு அதைவிட கிளைமாக்சில் கார் சேஸிங் செய்வது துப்பாக்கி தோட்டாக்கள் தெறிக்க தாக்குவது என ஆர்யாவின் ஆக்ஷன் காட்சிகள் உச்சத்தில் எகிறுகிறது   அதேபோல் கராத்தே மாஸ்டருடன் ஆர்யா மோதுவது சூப்பர் ஸ்டன்ட் காட்சி.

கருப்பு படத்தில் அப்பாவியாக நடித்த இந்திரன்ஸ் இந்த படத்தில் சைலன்ட் ரவுடியாக வருகிறார். நிகிலா விமல்,  ரெஜினா உள்ளிட்ட மற்ற நடிகர்களும்  தங்களது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.. சுனில் தெலுங்கு பேசும் ரவுடி போலீசாக வருகிறார்.

எஸ் வினோத்குமார் படத்தை தயாரித்திருக்கிறார். காட்சிகள் ஒரு பக்கம் வேகமெடுத்தாலும் அதை மேலும் உசுப்பி விடுகிறது பி. அஜனிஷ் லோக்நாத் இசை.

ஆக்சன் களத்துக்கான லைட்  டார்க்கில் காட்சிகளை படமாக்கி கண்களை ஈர்க்கிறது ஒளிப்பதிவாளர்  எஸ். யுவாவின்  கேமரா.

இரண்டு நாடு, மூன்றுக்கும் மேற்பட்ட மாநிலம் என பல களங்களை கொண்ட கதையாக உருவாகியிருக்கும இப்படத்தை தொடக்கத்தில் சற்று குழப்பமாக இயக்கி சென்றாலும் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் எல்லாவற்றுக்கும் விடை கொடுத்து கிளீன் ஆக்சன் படமாக தந்திருக்கிறார் இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார்

ஆனந்தன் காடு  – ஆர்யா ஆக்ஷனுக்காக..

Review by

K Jayachandhiran

Trending cinemas now.com

 

 

 

 

.

Related posts

“சிறை” பட தயாரிப்பாளரின் புதிய படம் தொடக்கம்..

Jai Chandran

“தி ரஜினி இன் மீ'” நூல் வெளியீட்டு விழா

Jai Chandran

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு காலதாமதம் ஏன்?

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend