Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கூறியதாவது:

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு, அரசாங்க இடங்களில் படப்பிடிப்பு நடத்த வெகுவாக கட்டண குறைப்பு, தமிழ்திரை உலகினருக்கு வீடு கட்டிகொள்ள பையனூரில் இடம் என திரை உலகின ருக்கு சலுகைகளை வாரி வழங்கிய வள்ளல் – ஐந்துமுறை அரியணையில் முதலமைச்சராக கம்பீரமாக அமர்ந்து கோலோச்சிய கோமான் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் அவரது பிறந்தநாளன்று ” தமிழ் திரை உலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதும், தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் பத்து லட்சமும் , நினைவுப்பரிசும் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வழங்கப்படும் என்றும் அதுவும் இந்த வருடம் ( 2022) ஜூன் மாதம் 3 ஆம் தேதியே வழங்கப்படும் என்றும் அதற்காக ஒரு குழு அமைத்து அதன் தலைவராக மூத்த இயக்குனரும் தயாரிப்பாளருமான  எஸ்.பி.முத்துராமன் உறுப்பினர்களாக நடிகர் சங்க தலைவரும் , தயாரிப்பாளருமான நாசர்  இன்னொரு உறுப்பினராக இயக்குனரும், நடிகருமான  கரு.பழனியப்பன் ஆகியோரை நியமித்து உடனடியாக ஆணை பிறப்பித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் ஒட்டுமொத்த தமிழ் திரைஉலகம் சார்பிலும் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.”

இவ்வாறு தேனாண்டாள் முரளி  கூறியுள்ளார்.

Related posts

வர்ணாஸ்ரமம் ( பட விமர்சனம்)

Jai Chandran

ஹிருது ஹாரூன் நடிப்பில் “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”

Jai Chandran

அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக பன் பட்டர் ஜாம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend