Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அக்காலி (பட விமர்சனம்)

படம்: அக்காலி

நடிப்பு: நாசர், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், சுயம்சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தரணி பரத், இளவரசன், விக்னேஷ் ரவிச்சந்திரன், சபீர் அலி, மஷிஹா சபீர்

தயாரிப்பு: பி விக்னேஸ்வரன்

ஒளிப்பதிவு: கிரி மர்பி

இயக்கம்: முகமத் ஆசிப் ஹமீது

பி ஆர் ஒ: நிகில் முருகன்

கடவுளை வணங்குவது போல் வெளியில் தெரியாத இன்னொரு குழு உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டி ருக்கிறது. சாத்தான் வழிபாடு குழு தான் அது. அதற்கு நரபலி தந்தால் தன்னிடம் இருக்கும் தீய சக்தியை தன்னை வணங்குபவர்களுக்கு தரும் என்ற நம்பிக்கை கொண்டவர்களாக அந்த குழு இயங்குகிறது. பெண் ஒருவரை நரபலி கொடுக்க சாத்தான் குழு கூட்டம் வலை விரிக்கிறது. அதை போலீஸ் உதவியுடன் சேர்ந்து நண்பர்கள் சிலர் முறியடிக்க முயற்சி எடுக்கின்றனர் அவர்களின் முயற்சியை வெற்றி பெற்றதா என்பதற்கு அக்காலி கிளைமாக்ஸ் பதிலளிக்கிறது.

சாத்தானை வணங்கும் குழுவின் தலைவனாக அக்காலி இருக்கிறார். அது யார் என்பது படத்தின் கிளைமாக்சில்தான் தெரிய வருகிறது. இப்படத்தில் தெரிந்த முகம்  நாசர் மட்டுமே. அவர் இரட்டை வேடம் ஏற்றிருக் கிறார். மற்ற எல்லோருமே புது முகங்கள். யார் யார் எப்படி நடித்திருக்கிறார்கள் என்பதை விமர்சிக்க கூட முடியாத அளவுக்கு அவர்களின் பெயர் அறியப்பட வில்லை.
ஒட்டுமொத்தமாக அர்ஜய், சேகர், யாமினி, தரணி பரத், இளவரசன், விக்னேஷ் ரவிச்சந்திரன், சபீர் அலி, மஹிஹா சபீர்  நடித்திருக்கி றார்கள் என்றுதான் குறிப்பிட வேண்டும். இன்னும் சில தெரிந்த முகங்கள் வினோதினி, தலைவாசல் விஜய், சுயம் சித்தா, வினோத் கிஷன் ஆகியோரை குறிப்பிடலாம்.

திரைக் கதையை அங்கும் இங்குமாக குழப்பியடித்திருப்ப தால் யார் யாரை துரத்துகிறார்கள், யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை புரிந்து கொள்ளவே நீண்ட நேரம் ஆகிறது.

பி விக்னேஸ்வரன் படத்தை தயாரித்திருக்கிறார்.

சாத்தான் உலகத்தைப் பற்றி சொல்வதால் படம் முழுவதையும் இருள் சூழ்ந்த நிலையிலேயே படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரி மர்பி .

இயக்குனர் முகமத் ஆசிப் ஹமீது என்ன கதை சொல்லப் போகிறோம் என்பதை தொடக்கத்தில் ஒரு வரியில் சொல்லி விடுகிறார் ஆனால் அதை சொன்ன விதம்தான் ராமாயணம் போல் நீள்கிறது. கடைசியில் இறையும் இருளும் சூழ்ந்த இவ்வுலகில் நாம்தான் சாத்தானோ என்று இயக்குனர் சொல்லி இருக்கும் விதம் ஒரு வகையில் உண்மைதானோ என்று என்ன தோன்றுகிறது.

அக்காலி- ஏதோ ஒன்றை சொல்ல முயன்று தெளிவாக சொல்ல முடியாமல் திணறி இருக்கிறார்கள்.

Related posts

ஆதி நடிக்கும் கிளாப் படம் முடிந்தது.. விரைவில் திரையில்

Jai Chandran

YeleloAilasa Video song from N4 –

Jai Chandran

“800” திரைப்பட விமர்சனம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend