Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

20 ஆண்டுக்கு பிறகு இணையும் மோகன்லால்- மம்முட்டி

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு மோகன்லாலும் மம்முட்டியும் இணையும், மலையாள சினிமாவின் பிரமாண்ட முயற்சி, இலங்கையில் படப்பிடிப்பு ஆரம்பம்.

மலையாள சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதும் பிரமாண்ட முயற்சி,  மோகன்லால் தீபம் ஏற்றி வைக்க அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இயக்குநர் **மகேஷ் நாராயணன்** இயக்கத்தில், இந்த மல்டி ஸ்டாரர் படம், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லாலை திரையில் ஒன்றாகக் கொண்டுவருகிறது. இந்த பெரும் ஆளுமைகளுடன், நட்சத்திர நடிகர்களான ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா உட்பட மற்றும் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். இது மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இப்படத்தை, சி.ஆர்.சலீம் மற்றும் சுபாஷ் ஜார்ஜ் மானுவல் ஆகியோர் இணை தயாரிப்பு செய்கின்றனர்.  படத்தின் கதை திரைக்கதையை மகேஷ் நாராயணன் எழுதியுள்ளார். ராஜேஷ் கிருஷ்ணா மற்றும் சி.வி. சாரதி நிர்வாக தயாரிப்பாளர்கள். நடிகர்கள் ரஞ்சி பணிக்கர், ராஜீவ் மேனன், டேனிஷ் ஹுசைன், ஷாஹீன் சித்திக், சனல் அமன், ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப் மற்றும் *மெட்ராஸ் கபே* மற்றும் *பதான்*  படங்களில் பணியாற்றிய நடிகர்-இயக்குநர் பிரகாஷ் பெலவாடி போன்ற குறிப்பிடத்தக்க நடிகர்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தயாரிப்பு வடிவமைப்பு ஜோசப் நெல்லிக்கல், ஒப்பனை ரஞ்சித் அம்பதி, ஆடைகளை தன்யா பாலகிருஷ்ணன், புரொடக்சன் கண்ட்ரோல் டிக்சன் போடுதாஸ். லினு ஆண்டனி தலைமை இணை இயக்குநராகவும், பாண்டம் பிரவீன் இணை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கை, லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஹைதராபாத், டெல்லி மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 150 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அதை ஏஎன்என் மெகா மீடியா விநியோகம் செய்யும். மக்கள் தொடர்பு  : சதீஷ் குமார் S2 Media

Related posts

Second Single Track From KodiyilOruvan

Jai Chandran

ஆஸ்கர் விருது வென்ற நடிகர் எட்ரியன் – நடிகை மிகே

Jai Chandran

கதிர், நரேன் மற்றும் yukiநட்டி நடிக்கும்  ‘யூகி’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend