Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தற்கொலை செய்த நடிகை சித்ரா நடித்த படம் ரிலீஸ் ஆகிறது

பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி தொடரில் நடித்துவந்தார் விஜே.சித்ரா. இவர் சில தினக்களுக்கு முன் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சித்ரா நடித்த திரைப்படம் ஒன்று திரைக்கு வரவுள்ளது

இன்பினிட் பிக்சர்ஸ் (Infinite Pictures) நிறுவனம் தயாரித்த “கால்ஸ்” என்ற திரைப்படம் கடந்த 2019 ஜூலை மாதம் நடிகர் டெல்லி கணேஷ் அவர்களால் பூஜையுடன் துவங்கி தஞ்சாவூர், திருச்சி , சென்னை, வாரணாசி என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த படத்தில் விஜே சித்ரா கதாநாயகியாகவும், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி , ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இயக்குனர் ஜெ.சபரிஸ் இயக்குகிறார். தமீம் அன்சாரி இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு (2020) ஜனவரி மாத இறுதியில் நிறைவடைந்தது . மேலும் முழுவீச்சில் இறுதி கட்ட பணிகள் நடந்த நிலையில், ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, கொரோனா காரணமாக மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட இறுதிக்கட்ட பணிகள், செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் வேகமாக தொடங்கி 15 டிசம்பர் ஃப்ர்ஸ்ட்ர் லுக், ஜனவரி 1 2021 ட்ரெய்லர் ரிலீஸ் மற்றும் ஜனவரி இறுதியில் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குள் எதிர் பாராத விதமாக படத்தின் கதாநாயகி சித்ரா காலமானார். அவரின் கனவு வெள்ளித்திரையில் தன்னை காண வேண்டும் என்பது, அதற்குள் அவர் எதிர்பாராத விதமாக மறைந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இருப்பினும் அவருடைய விருப்பத்தின் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். அதற்காக அனைவரது ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

Related posts

Koozhangal Selected for Screening in Molodist Festivel

Jai Chandran

விஜய்யை நேரில் சந்தித்த விஷால்

Jai Chandran

அமிதாப்பச்சனின் பிறந்த நாளுக்கு வாழ்த்திய புராஜக்ட் கே பட குழு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend