தமிழக முதல் அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் பின்னர் கவர்னர் மாளிகையில் இருந்து கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார். அங்கு கலைஞர் கருணாநிதி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். சகோதரி மு.க.செல்வியும் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறினார். பிறகு சென்னை, மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடம், அறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களும் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து பெரியார் நினைவிடம் சென்ற முதல்வர் அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பேராஸ்ரீயர் க.அன்பழகன் இல்லம் சென்று மரியாதை செலுத்தினார்.
அங்கிருந்து நேராக தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் துறையின் மரியாதையை ஏற்றார் . இதையடுத்து முதல்-அமைச்சர் அறைக்கு சென்று அமர்ந்தார்.
தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாக பொறுப் பேற்ற பின் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனை களிலும் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்கும். நாளை முதல் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் .
ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்து உத்தரவு.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை உருவாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் அறிவித்தி ருந்தார். அதன்படி முதல் தவணையாக ரூ.2000 வழங்கப் படும் என்ற கோப்புகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.