Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வராக பதவிஏற்றார் மு.க.ஸ்டாலின்.. 33 அமைச்சர்களும் பதவி ஏற்பு

நடந்து முடிந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 159 இடங்கள் பெற்று வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் தனிப்பட்ட முறையில் 125 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இதையடுத்து நடந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பிறகு நேற்று தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதுடன் அமைச்சரவை பட்டியலும் அளித்தார். அதை ஏற்று மு.க.ஸ்டாலினை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். அதற்கான பதவி ஏற்பு விழா செனையில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று காலை எளிமையாக நடந்தது.
மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற நான் என்றுசொல்லி பதவியை ஏற்றுக்கொண்டார் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக கவர்னருக்கு ஸ்டாலின் பூச்செண்டு கொடுத்து பொன்னாடை அணிவித்தார். அதேபோல் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பூச்செண்டு அளித்து வாழ்த்து தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றிருக்கும் நிலையில் அவரது அமைச்சரவையில் மேலும் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம், ரகசிய கப்பு பிரமாணம் செய்து வைத்தார் புதிதாக பதவி ஏற்றிருக்கும் அமைச்சர்கள் விவரம் வருமாறு:
1) துரைமுருகன்
(நீர்ப்பாசனத்துறை )
2) கே.என்.நேரு (தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை)
3)இ.பெரியசாமி (கூட்டுறவுத்துறை)
4) க.பொன்முடி (உயர்கல்வி துறை)
5) எ.வ.வேலு(பொதுப்பணித்துறை)
6) எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்(வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்)
7) கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை)
8) தங்கம் தென்னரசு (தொழில் துறை)
9) எஸ்.ரகுபதி (சட்டத்துறை)
10) சு.முத்துசாமி (வீட்டு வசதித்துறை)
11) பெரியகருப்பன் (ஊரக வளர்ச்சித்துறை)
12) தா.மோ.அன்பரசன் (ஊரக தொழில் துறை)
13) மு.பெ.சாமிநாதன் (செய்தி மற்றும் விளம்பரத்துறை)
14) பெ.கீதாஜீவன்(சமூகநலத்துறை)
15) அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
( மீனவர் வளத்துறை)
16) கா.ராமச்சந்திரன்(வனத்துறை)
17) ராஜகண்ணப்பன்
(போக்குவரத்து துறை)
18) அர.சக்கரபாணி (உணவுத்துறை)
19) வி.செந்தில்பாலாஜி(மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை)
20) ஆர்.காந்தி (கைத்தறித் துறை)
21) மா.சுப்பிரமணியன்
(சுகாதாரத்துறை)
22) பி.மூர்த்தி(வணிக வரித்துறை, பதிவுத்துறை)
23) எஸ்.எஸ்.சிவசங்கர்
(பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை)
24) சேகர் பாபு (இந்து சமய அறநிலையத் துறை)
25) பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (நிதித்துறை)
26) ஆவடி சா.மு.நாசர் (பால்வளத்துறை)
27) செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
(சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை)
28) அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளி கல்வித்துறை)
29) சிவ.வீ.மெய்யநாதன்
(சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுதுறை)
30) சி.வி.கணேசன்(தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை)
31) மனோ தங்கராஜ் (தகவல் தொழில்நுட்பத்துறை)
32) மதிவேந்தன் (சுற்றுலாத் துறை)
33) கயல்விழி செல்வராஜ்
(ஆதிதிராவிடர் நலத்துறை)

Related posts

Title Look of KuranguPedal

Jai Chandran

Iஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2000 நெருங்குகிறது

Jai Chandran

Vijayakanth, Premalatha Wedding Anniversary

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend