நடந்து முடிந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமயிலான திமுக கூட்டணி 159 இடங்களில் அமோகமாக வெற்றி பெற்றது. திமுக மட்டும் தனிப்பட்ட மெஜாரிட் டியாக 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் வெற்றிபெற்ற திமுக எம் எல் ஏக்கள் அனைவரும் சென்னை யில் உள்ள அறிவாலயத்துக்கு நேற்று வந்தனர். திமுக சட்ட மன்ற தலைவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அழைப்பு விடுத் திருந்தார். இந்த கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
எம் எல் ஏக்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கட்சி தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப் பட்டார். அதற்கான கடிதத்தில் 133 எம் எல் ஏக்கள் (திமுக 125 மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சி களைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க் கள்).
இதையடுத்து இன்று காலை கிண்டி கவர்னர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் சென்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனை கவர்னர் ஏற்றுக் கொண்டார். மு.க.ஸ்டாலி னுடன் அவருடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்று இருந் தனர்.
இதையடுத்து நாளை மறுநாள் 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பதவிபிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அன்றைய தினம் மு.க.ஸ்டாலின் அமைச்சரவை யில் பங்கேற்க உள்ள புதிய அமைச்சர்களும் பதவி ஏற்கி றார்கள்.