Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தனியார் மருத்துவமனை கட்டணம் முதல்வருக்கு கமல்ஹாசன் கோரிக்கை..

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அமையவிருக்கும்‌ புதிய அரசுக்‌ கோரிக்கை வைத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள்‌ அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள்‌ நிரம்பி வழிகின்றன. கொள்ளை நோய்‌ பரவும்‌ பேரிடர்‌ கால நெருக்கடியைப்‌ பயன்படுத்திக்கொண்டு சல தனியார்‌ மருத்துவமனைகள்‌ ஈவிரக்கமின்றி நடந்து வருகின்றன. எரிகிற வீட்டில்‌ பிடுங்கியவரை லாபம்‌
என மருத்துவக்‌ கட்டணங் களைப்‌ பல மடங்கு உயர்த்தி யுள்ளனர்‌.
லட்சக்கணக்கான ரூபாய்‌ முன்பணமாக செலுத்தினால் தான்‌ அனுமதி அப்படி செலுத்தும்‌ பணத்தில்‌ பாதியை கணக்கில்‌ வராத கருப்புப்‌ பணமாகத்‌ தரவேண்டும்‌. ரசீது கிடை யாது.
எப்போது கிளம்பச்‌ சொன்னாலும்‌, டிஸ்சார்ஜ்‌ சம்மரி இல்லாமலேயே கிளம்பி விட வேண்டும்‌ என
அடாவடி செய்கிறார்கள்‌. எவ்வளவு பணம்‌ கொடுத்து வேண்டுமானாலும்‌ தங்கள்‌ உயிரைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ள பணம்‌ படைத்தவர்கள்‌ தயாராக இருப்பதால்‌, இந்த நெருக்கடியைப்‌ பயன்படுத்திக் கொண்டு பகற்கொள்ளை அடிக்‌கின்றனர்‌.
உதாரணமாக, நுரையீரல்‌ தொற்று எந்தளவிற்கு உள்ளது என்பதைத்‌ தெரிந்து கொள்வ தற்கான சிடி ஸ்கேன்‌ கட்டணம்‌ ரூ.1500/-ல்‌ துவங்க ரூ.8,000/- வரை விதம்‌ விதமாக வசூலிக்கப்படுகிறது
ஆர்டிபிசிஆர்‌ சோதனைக்கு ரூ.3,000/- துவங்கி ரூ.10,000/- வரை வசூலிக்‌கறார்கள்‌. இப்படியாக கொரோனா சிகிச்சையின்‌ ஒவ்வொரு அலகிலும்‌ கொள்ளை நிகழ்கிறது.
ஒரு மருத்துவரின்‌ சேவைக் கான கட்டணம்‌ அவரது கல்வி, அனுபவம்‌, திறமை பொருத்து
மாறுபடலாம்‌ நோயாளிகள்‌ எதிர்பார்க்கும்‌ லக்ஸூரியைப்‌ பொருத்து அறை கட்டணம்‌
மாறுபடலாம்‌. ஆனால்‌, மருத்துவப்‌ பரிசோதனைகள்‌, மருந்து மாத்திரைகள்‌, உபகரணங்கள்‌,
தடுப்பூசிகள்‌, ஆக்ஸி‌ஜன்‌ சிலிண்டர்கள்‌, ஆம்புலன்ஸ்‌ என ஒவ்வொன்றும்‌ தமிழகம்‌ முழுக்க வெவ்வேறு கட்ட ணங்களில்‌ பன்மடங்கு வசூலிக்கப்படுகிறது.
அமையவிருக்கும்‌ புதிய அரசு உடனடியாக இந்த விவகாரத் தில்‌ தலையிட்டு கொரோனா
சிகிச்சைக்கான கட்டணங் களை நெறிப்படுத்த வேண்டும்‌. அதிகபட்ச விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்‌. கொள்ளை நோய்‌ காலத்தில்‌ எல்லாவிதமான மருத்துவ நடைமுறைகளும்‌,
சேவைகளும்‌ தரப்படுத்தப் பட்டு ஒரே மாதிரியான கட்டணமே தமிழகம்‌ முழுக்க உள்ள அனைத்து தனியார்‌ மருத்துவமனைகளிலும்‌ நிர்ணயிக்கப்பட வேண்டும்‌.
தமிழக முதல்வராகப்‌ பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலின்‌ இதை உடனடி யாகப்‌ பரிசீலிக்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌.
நாளை நமதே!
இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.

Related posts

சினிமா தான் என் உயிர்’ – சீயான் விக்ரம் உருக்கம்.

Jai Chandran

Actor Udhaya’s heartfelt post on his mother

Jai Chandran

தீரஜ் நடிக்கும் “டபுள் டக்கர்” பட விழாவில்.மிஷ்கின் பரபரப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend