தமிழக முதல்வராக 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனாலும் அவர் தனது பணிகளை நேற்று முதலே தொடங்கி இருக்கி றார். கொரோ னா பெருந் தொற்றை ஒழிக்கும் நடவடிக் கைகளை தீவிரமாக மேற் கொண்டிருக்கிறார். அதற்கான உத்தரவுகளை சுகாதார துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டிருப்பதுடன் இது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல என மக்களுக்கு தன்னம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிக்கை:
கோவிட் -19 பரவலை தடுப்பதற்கான புதிய கட்டுப் பாடுகள் நாளை முதல் செயல் பாட்டுக்கு வருகின்றன.
மருத்துவ அவசரநிலை அளவுக்கு கோவிட்-19 தொற்றின் தீவிரம் இருப்ப தால், உடனடியாக கட்டளை மையம் (War Room) ஒன்றை திறந்திட வேண்டும் என தலைமை செயலாளரிடம் கூறியுள்ளேன்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கை களின் தேவை, தடுப்பூசி இருப்பு ஆகியவற்றைத் தெரிந்து ஒருங்கிணைந்து செயல்பட இந்த மையம் உதவியாக இருக்கும்.
முன்களப்பணியாளர்களின் பங்களிப்பு மாபெரும் மக்கள் சேவையாக மாறிவிட்டது. மருத்துவ அவசர நிலைக் காலம் என்பதால் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்கீடு செய்து வரும் தனியார் மருத்து வமனைகள் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்யவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்
கட்டணத்திலும், முடிந்தளவு சலுகை காட்டுமாறும் கேட்டுக்கொள்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த கருணை காட்டி உயிரை செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும். உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவ மனைகளும் தம்மை முழுமை யாக ஒப்படைக்க வேண்டும்.
இது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.