சமீபத்தில் நடந்து முடிந்த 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தனிமெஜாரிட்டி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித் முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் அதிரடியாக பெண்களுக்கு டவுன்பஸ்களில் இலவச பயணம், பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் 2 தவணைகளாக தலா 2 ஆயிரம் தர உத்தரவிகளை பிறப்பித்தார்.
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (11ம் தேதி) எம் எல் ஏக்கள் பதவி ஏற்கும் விழா நடந்தது. சட்டமன்ற தற்காலிக சபாநா யாகராக தேர்வு செய்யப்பட்ட கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதை தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், , பொன்முடி, மா.சுப்ரமணியம் போன்றவர்களும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி, ஒ.பன்னீர் செல்வம், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் எம் எல் ஏவாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
previous post