திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் தமிழக முதல்வராக பதவி ஏற்றதிலிருந்து ஏழை மக்கள் மீது அதிக கவனம் செலுத்தி அவர்களின் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறார். அனைத்து பெண்களுக்கும் மாநகர பஸ்ஸில் இலவச பயணம் என்ற உத்தரவு பெண்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற புரட்சி திட்டமாக அமைந் துள்ளது. அத்துடன் கொரோனா 2வது அலையில் பாதிக்கப்பட்டிருக்கும் ரேஷன் அட்டை தாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்ட துடன் அதனை தொடங்கியும் வைத்திருக்கிறார். இந்திஅ திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு முதல் தவணை யாக 2 ஆயிரம் வழங்குவதற் கான டோக்கன் தரப்பட்டிருக் கிறது.
இந்நிலையில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் வரும் மே 2ம் தேதி வரை தளர்வு களுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவித்திருக் கிறார்.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் கோதுமை, உப்பு, ரவை, சர்க்கரை, பருப்பு, மஞ்சள் தூள், கடுகு, சீரகம், சோப்பு உள்ளிட்ட 13 வகை பொருட் கள் அடங்கிய தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.
முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான வரும் ஜூன் 3ஆம் தேதி அன்று நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கி றது.