படம்: மாஸ்டர்
நடிப்பு: விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், நாசர், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்
தயாரிப்பு: சேவியர் பிரிட்டோ
இசை: அனிரூத்
ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்
இயக்கம்: லோகேஷ் கனகராஜ்
நகரில் கல்லூரியில் ஜே டி (விஜய்) பேராசியராக பணியாற்றுகிறார். தனி ஆள். மாலை நேரமானதும் குடியில் மூழ்கி விடுவார். எப்போதும் மாணவர்களுக்கு ஆதரவாக இருப்பதால் மாணவர்கள் அவர் மீது பாசமாக இருக்கி றார்கள். இதற்கிடை யில் சீர் திருத்த பள்ளியில் இருக்கும் பவானி (விஜய் சேதுபதி) லாரி அதிபராகி ரவுடியாக வலம் வருகிறார். தன்னை எதிர்ப் பவர்களை அடித்தே கொல் கிறார். தான் செய்யும் கொலைக்கு தனக்கு பதிலாக சீர் திருத்த பள்ளியில் இருக்கும் சிறுவர்களை ஆஜாராக வைக்கிறார். இதற் கிடையில் கல்லூரி தேர்தலில் கலாட்டா நடப்பதால் அந்த கல்லூரியிலிருந்து சீர் திருத்த பள்ளிக்கு மாஸ்டராக வருகி றார் ஜேடி. அங்குதான் பவானி யின் ஆதிக்கம் அதிகம். ரவுடி களை வைத்துக்கொண்டு சிறுவர்களை ஆட்டிபடைக் கிறார். கொலை வழக்கில் ஆஜர் ஆக மறுத்த 2 சிறுவர் களை கொன்று தூக்கில் தொங்க விடுகிறார். அதைக் கண்டு ஆவேசம் அடையும் வாத்தி ஜே டி, சிறுவர்களை கொன்ற பவானியை பழிவாங்க முடிவு செய்கிறார். அதை ஜே டி செய்து முடித் தாரா என்பது கிளைமாக்ஸ்.
படம் தொடங்கியதும் சிறிது நேரம் கழித்தே விஜய் அறிமுக மாகிறார். அதற்கு முன்பாக விஜய் சேதுபதியின் அடாவ டிக்கான விளக்கத்தை கொடுக் கிறார் இயக்குனர்.
தந்தையை கொன்றவர்களின் மிரட்டலுக்கு பயந்து சிறுவர் சீர்திரத்த பள்ளிக்கு செல்லும் விஜய் சேதிபதியின் இளவயது கதை கரடுமுரடாகவே தொடங்கு கிறது.
விஜய் சேதுபதியின் உருவம் ஆஜான பாகுவாக இருந்தா லும் பேச்சில் அப்பாவித்தனத்தைகாட்டி வில்லத்தனம் செய்து மிரட்டுகிறார். விஜய் சேதுபதிக்கு இந்த பில்டப்பென்றால் விஜய்க்கு எந்தளவுக்கு பில்டப் இருக்கும் என்று சொல்லித் தெரியவேண் டுமா? அமைச்சர் வந்து விழா மேடையில் காத்திருக்க சஸ்பெண்டில் இருக்கும் விஜய் வந்தால்தான் விழாவை நடத்தவிடுவோம் என்று மாணவர்கள் வம்பு செய்வதும் அதற்கு கல்லூரி முதல்வர் ஒப்புக்கொண்டு அனுமதி கொடுத்ததும் வாத்தி கம்மிங் பாட்டோடு தடபுடலாக வருகிறார் விஜய். அதற்கு முன்பே ஒரு ஆக்ஷன் காட்சியும் அரங்கேறுகிறது.
கல்லூரி வாத்தியார்தான்.. ஆனால் தரைலோக்களில் விஜய் கதாபாத்திரத்தை டிசைன் செய்திருக்கிறார் இயக் குனர். தப்பட்டை கிழிய அடிக்கும் அடிக்கு டான்ஸ் ஆடிக் கொண்டே கல்லூரிக் குள் விஜய் வருவதெல்லாம் ரசிகர்களுக்கு விசில் பறக்க செய்ய சரியான டைமிங்.
சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு சென்ற பிறகுதான் விஜய்யின் ஆட்டமே ஆரம்பமாகிறது. அங்கிருக்கும் அர்ஜூன்தாஸை யும் ரவுடி கூட்டத்தையும் எப்போது வெளுக்கப்போகி றார் என்று ஆடியன்ஸ் காத்தி ருக்கின்றனர்.
சிறுவர்களை அடிக்கக்கூடாது என்று வார்டன் விஜய்யை தடுக்க, ’அவங்களைத்தானே அடிக்கக்கூடாது. உங்களை அடிக்கலாமில்ல’ என்று வார்டன்களை பெண்டு நிமித்துவது பரபர.
விஜய்யும், விஜய் சேதுபதியும் எப்போது நேருக்கு நேர் சந்திப் பார்கள் என்ற ஆர்வத்தை காட் சிக்கு காட்சி அதிகப்படுத்தி இருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவர் கழுத்தி லேயே கத்தி வைத்து யார்ரா இங்க பவானி என்று கேட்டு அசர வைக்கிறார் விஜய்.
விஜய், விஜய் சேதுபதி இறுதி கட்ட மோதல் அதிரடியாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி யின் அடிதாங்க முடியாமல் கீழே விழும் விஜய் பிறகு மீண்டும் எழுந்து அவரை நய்யபுடைப்பதும் சண்டை முடிந்து கீழே விழுந்த விஜய் சேதுபதி, ’நான் அரசியலுக்கு போலான்னு இருக்கேன் நீ என்னோட சேர்ந்துக்கிறியா’ என்று கேட்பது ஆக்ஷன் கலகலப்பு. விஜய் ஆடும் கபடி ஆட்டம் கில்லியை ஞாபகப்படுத்துகிறது.
சுமார் 3 மணி நேர படமான இதில் காதல், காதல் டூயட், காமெடி இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக்கப் பட்டிருக்கிறது. அதற்கேற்ப டிரையான பின்னணி காட்சி கள் பொருத்தமாக அமைக்கப் பட்டிருக்கிறது.
அனிருத் தன் பங்குக்கு பாட்டை போட்டு தாக்கி இருக்கிறார். சும்மாவே விஜய் ஆடுவார் அனிருத் குத்தியிருக் கும் இசைக் குத்துக்கு அதகளம் செய்துவிடுகிறார். காதல் கோட்டை முதல் டைட்டானிக் படம் வரை கதைகள் சொல்லி சிரிக்கவும் வைக்கிறார் விஜய்.
மாளவிகா மோகனன் அழகாக இருக்கிறார். அதிக வேலை இல்லை. ஆண்ட்ரியாவுக்கும் பெரிய வாய்ப்பில்லை. கைதி அர்ஜுன்தாஸ் குட்டி வில்லன்.
ஒளிப்பதிவில் எங்கும் கோட்டை விடாமல் கதையின் மூடை கடைசிவரை தக்க வைத்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் விஜய்யையும் அவரது மாஸையும் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.
மாஸ்டர் – அதிரடி ஆக்ஷன்.